செயற்கரிய யாவுள நட்பின்...

"
செயற்கரிய யாவுள நட்பின்...


 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு"
                  குறள் :781
                  
செயற்கு - செய்து கொள்வதற்கு
அரிய- அருமையான,
யாவுள - எதேனும் உளதோ?
நட்பின் - நட்பைப்போல
வினைக்கு - செயலுக்கு
அரிய- சிறப்பு தரக்கூடியவை
யாவுள -ஏதேனும் உளதோ?
காப்பு - பாதுகாப்பு


நட்பைப்போல் செய்து கொள்வதற்கு 
அருமையானவை
ஏதேனும் உளதா?
அதுபோல நாம் செய்யும் செயலுக்குச் சிறப்பான
பாதுகாவலனாக இருக்கக் கூடியது
ஏதேனும் இருக்கின்றதா?


விளக்கம் :

இரண்டு கேள்விகளை நம் முன் வைத்து
நம்மையே முடிவு செய்துகொள்ளச்
சொல்வதாகத்தான் இந்தக்குறள் அமைந்துள்ளது.

நட்பைப் போல தேடிச் செய்துகொள்ள அரிய
செயல்கள் ஏதேனும் உள்ளனவா?
நட்பு என்பது அருமையான செயல்.
செய்க பொருளை என்ற வள்ளுவர் இங்கே
செய்க நட்பை என்கிறார்.
தேடித் தேடிச் சேர்த்து வைத்துப்
பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது
நட்பு.

நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதன்று.

அதுபோல ஒருவர் செய்யும் செயலுக்கு நட்பு போல் 
அரிய காவல் வேறில்லை.

தனியாக செய்யும் செயலை விட நட்போடு
இணைந்து செய்யும் செயல் சிறப்பாக அமையும்.
பாதுகாப்பு கொண்டதாகவும் இருக்கும்.

நட்பைப் போல உண்டாக்குதற்கு அரிதான
பொருள் ஏதும் உண்டோ?
நட்பைப்போல நாம் செய்யும் செயலுக்கு
உறுதியான பாதுகாப்பு எதுவும் உளதோ?
என்று இரண்டுகேள்விகளைக் கேட்டு,

"நட்பைப் போல உண்டாக்கிக்கொள்ள அரிதான
பொருளும் கிடையாது. 
நட்பைப்போல செயலுக்கு நல்ல 
பாதுகாப்பாக இருப்பதுவும் வேறு
எதுவும் இருக்க முடியாது"
என்று நம்மையே
முடிவுரையும் எழுத வைத்துவிட்டார்
வள்ளுவர்.


English couplet:

What so hard for men to gain as friendship true? What so sure
defence 'gainst all that foe can do?

Explanation :

What things are there so difficult to acquire as friendship?
What gaurds are there so difficult to break through
by the efforts of one's foe.

Transliteration :

"Seyarkatiya yaavula natpin adhupol
Vinaikkariya yaavula kaappu "

Comments

Popular Posts