சீரிடம் காணின் எறிதற்குப்.....

சீரிடம் காணின் எறிதற்குப்...."சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு"     

                  குறள்: 821

சீரிடம்- வாய்ப்பான இடம்
காணின் - பெற்றால்,வாய்த்தால்
எறிதற்கு-வெட்டுவதற்கு உதவும்
பட்டடை- பட்டறைக்கல்
நேரா- பொருந்தாதிருந்து
நிர ந்தவர் -கூடியிருந்தவர்
நட்பு- கேண்மை,உறவுஉள்ளான அன்பு இல்லாமல் நண்பரைப்போல
கூடி இருப்பவர்  நட்பானது  
இரும்பைத் துண்டாக்கப்
பயன்படும் பட்டறைக் கல்லைப்
போன்று கேடு செய்யும் தொழிலுக்காகக்
காத்திருப்பதாகவே இருக்கும்.


விளக்கம்:

கொல்லன் பட்டறைக்கல் 
கூடவே இருந்து தாங்குவது போல
ஒரு இடத்தில் அப்படியே கிடக்கும்.
ஆனால் அதற்கான வேலை வரும்போது
துண்டு துண்டாக வெட்டும் செயலை
மட்டுமே செய்து முடிக்கும்.

கொல்லன் பட்டறைக்கல் கொல்லனோடு கூடவே
இருந்தாலும் தீங்கு செய்யும் ஆயுதங்களைக்
கூர்தீட்டிக் கேட்டிற்குத் துணைபோவதாகவே
இருக்கும்.

அது போன்றுதான் உள்ளன்போடு
ஒத்துப்போகாதவருடைய நட்பு இருக்கும்.
அமைதியாக இருப்பதுபோல்தான் இருப்பர்.
அவர்களுக்கான நேரம் வாய்ப்பாக 
அமையும்போது கேடு செய்வதைத் தவிர
வேறு எந்த நன்மை செய்யும்
பண்பும் அவர்களிடம் இருக்காது.
மனம் ஒத்துப்போகாதவரோடு
கொள்கிற நட்பு கேடாய் தான்
முடியும் என்கிறார்  வள்ளுவர் .

English couplet:

"Anvil where thou shalt smitten be when men occasion find
Is friendship's form without concenting mind"

Explanation:

The friendship of those who behave like friends
without inward affection is a weapon that 
may be thrown when a favourable opportunity
presents itself.

Transliteration:

"Seeritam kaanin eridharkup pattatai
Neraa Nirandhavar Natpu"


Comments

Popular Posts