அறத்தான் வருவதே இன்பம்.....

  அறத்தான் வருவதே இன்பம்....அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல"

                 குறள் : 39

அறத்தான் - அற வழியில்
வருவதே -கிடைப்பதே
இன்பம்- மகிழ்ச்சி
மற்றெல்லாம்- மற்றவை எல்லாம்
புறத்த- அறத்திற்குப் புறம்பான
புகழும் -புகழ்
இல் - இல்லை


ஒருவன் செய்யும் அறத்தால் கிடைக்கும் 
இன்பமே பெருமைக்குரிய இன்பமாகும்.
பிற செயல்களால் கிடைக்கும் புகழ்
இன்பம் தருவதாக இருந்தாலும்
அது சிறந்த புகழாகாது.

விளக்கம்:

 இன்பமும் புகழும் பல வழிகளில்
 வந்து சேரும்.
 சிலருக்கு ஈட்டிய பொருளால்
 இன்பம் வரலாம்.
 இன்னும் சிலருக்குச்
 செய்யும் செயலால்  இன்பமும்
 புகழும் வந்து சேரலாம்.
 ஆனால் இவை யாவும் அறவழியில்
 வந்து சேர்ந்தவையாக இருக்க 
 வேண்டும்.
 அதுதான் உண்மையான இன்பம்.
 அறவழி நின்று ஈட்டப்படாத
 புகழும் இன்பமும் பெருமை தருவதாக
 இருக்காது. ஒருவன் சிறப்பான
 புகழைப் பெற வேண்டும் என்று விரும்பினால்
 நல்வழி பொருளீட்ட வேண்டும்.
 அதனை நல்வழியில் பயன்படுத்த
 வேண்டும். அதனால் புகழ் வந்து
 சேர வேண்டும்.
 
 அப்படி ஈட்டப்படும் புகழ் மட்டுமே
 சிறப்பான இன்பமாகக் கருதப்படும்.
 
 அறத்தால் கிடைக்கும் புகழே
 சிறப்பானது.
 அறத்தின் முன்னால் வேறு எந்த
 புகழும் சிறப்புடையதல்ல.
 ஆதலால் அறச்செயல்களைச்
 செய்வதின் மூலம் புகழை ஈட்டுக 
 என்பது வள்ளுவர் கருத்து.
 

English couplet:

"What from virtue  floweth yieldeth dear delight
 all else extern is void of glory's. light"

Explanation:


Only that pleasure which flows from domestic virtue
is pleasure all else is not pleasure and it is
without praise.

Transliteration:

"Araththaan varuvadhe inpammat rellaam 
Puraththa pukazhum ila"

 

Comments

Popular Posts