உலக இட்லி தினம்


உலக இட்லி தினம்

மார்ச் 30 உலக இட்லி தினம்.
இட்லிக்கும் ஒரு தினமா?
மீந்து போன இட்லி மாவில்
சுடும் தோசைக்கே ஒரு தினம்
இருக்கும்போது இட்லிக்கு
ஒரு தினம் இருக்கக்கூடாதா என்ன?

இட்லி என்றாலே தமிழர்
உணவுதான்.
இட்லி சாம்பாருக்குப் பேர் பெற்றவர்கள் நாம்
தான் . இதில் பெருமை உண்டு.

எவ்வளவுதான் பெருமைமையாகப்
பேசினாலும் இட்லியின் பிறப்பிடம்
தமிழகம் இல்லையாம்.

என்னது இட்லி நம்ம ஊர் 
உணவு இல்லையா?
இவ்வளவு நாளும் எங்க ஊர்
இட்லிக்கு இணையாகுமா உங்க ஊர்
உணவு வகைகள் ?என்று எத்தனை இடங்களில்
எத்தனை மொழி பேசுபவர்களின்
சொல்லிச் சொல்லிப் பெருமைப்
பட்டிருக்கிறேன்.
இப்படி பொசுக்கென்று இப்படி
சொல்லிலிபுட்டீங்களே....என்கிறீர்களா?

இட்லி பெருமை எல்லாம் இருந்த இடம்
தெரியாமல் போய்விட்டதா?


விடுங்கள். இந்தோனேசியாகாரர்கள்
வேண்டுமென்றால் இட்லியின் தாயகம்
இந்தோனேசியா தான் என்று 
பெருமைப்பட்டுக்
கொள்ளட்டும்.

ஆனால் இட்லியைத் தரமேம்பாட்டுக்கு
உட்படுத்திய பெருமை நம்மைத்தான்
சேரும்.இதை யாரும் தட்டிப்பறித்துச்
சென்றுவிட முடியாது.

எத்தனை விதமான இட்லி வகைகளை
அவித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எந்தத் தானியத்திலும் இட்லி அவிக்கத்
தெரியும்.

வெறும் அரசிமாவையும் உளுந்தம் மாவையும்
 மட்டுமே வைத்து ஐம்பது வகையான 
 இட்லி பண்ணுவோம்ல்ல....

அது எப்படி முடியும் என்கிறீர்களா?
ஏன் முடியாது?

நான் சொல்கிறேன். நீங்களே கணக்குப்
பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காய்
எடுத்துக்கொள்ளுங்கள்.
கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து
அதோடு உங்களுக்குப் பிடித்த
காயைப் போட்டு சற்று வதக்கி உப்பு
மிளகுத்தூள் சேர்த்து எடுத்து
வைத்துக் கொள்ளுங்கள். 
அதனை இட்லி மாவோடு சேர்த்துக்
கலக்கி இட்லி அவித்தால் சுவையான
காய்கறி இட்லி ரெடி.

ஒரு காயா? இரண்டு காயா?
நாளும் காயின் பெயர் மாறிக்கொண்டே இருந்தால்....

எத்தனை வகையான 
காய்கறி இட்லி அவிக்க
முடியும்?

கணக்குப் போட்டாயிற்றா?

அடுத்து கீரைக்கு வாருங்கள்.
 கீரையை நறுக்கி
போட்டு இதே போன்று
மசாலாப் பொடி தூவியோ வெறும்
மிளகுத்தூள் மட்டுமோ கலந்து
இட்லி அவிக்கலாம்.

கீரை எண்ணிக்கைக்கு ஏற்ப
இட்லியின் பெயர்களும்
கூடிக்கொண்டே இருக்கும்.

அதை அடுத்து கதம்ப காய் இட்லி.
கதம்பக் கீரை இட்லி இப்படி
மாற்றிக் கொண்டே போகலாம்.

இனிப்பு இட்லி.
சினை இட்லி.
காஞ்சிபுரம் இட்லி.
நெல்லை இட்லி.
மல்லிப்பூ இட்லி
குஷ்பு இட்லி
என்று எத்தனை வகையான
இட்லி வகைகள்.

பயிறு வகைகளை அவித்து
சற்று மிளகுத்தூள் வற்றல் தூள்
பெருங்காயப்பொடி சேர்த்து
எண்ணெயில் பிரட்டி எடுத்து இட்லி 
ஊற்றும்போது ஒரு கரண்டியளவு
நடுவில் பயறு வகைகளை வைத்து
அவித்துப் பாருங்கள்.
அத்தனைப் பருப்பு வகைகளின்
பெயரோடு புதிது புதிதாக
இட்லி அவித்து அசத்தலாம்.

இந்த அவித்து வைத்தப் பருப்பு
வகைகளோடு வெல்லம் அல்லது
கருப்புக் கட்டி சேர்த்து இனிப்புப்
பயறு இட்லி செய்தும் அசத்தலாம். 
பதுப்புதுப்பெயர் சூட்டி
அனைவரையும் ஆச்சரியப்படுத்தலாம்.

சோள இட்லி,கம்பம்புல் இட்லி,குருதவாலி
இட்லி, கேழ்வரகு இட்லி, சாமை இட்லி, கோதுமை
இட்லி,சவ்வரசி இட்லி,அவல் இட்லி ஓட்ஸ்
இட்லி என்று அனைத்து
தானியவகைகளிலும்
இட்லி அவிப்போமில்ல.!..

அரசியும் உழுந்தும் என்ன விகிதத்தில்
சேர்த்து தனித்தனியாக அரைத்துக்
கலந்து புளிக்க வைத்து இட்லி அவிப்போமோ 
அதே மாதிரி ஊற வைத்து அரைத்துப்
புளிக்க வைத்துச் அவித்தால் போதும்.
உளுந்து சேர்க்காமல் இட்லி
அவித்தால் உப்பி வராது.
உங்கள் வசதிக்கு ஏற்ப முந்திரி,
பதாம், உலர் திராட்சை என்று
அவற்றையும் வைத்து 
அலங்கரித்து அசத்தலாம்.

தின்பதற்கு நான் ரெடி.
செய்வதற்கு நீ ரெடியா?
என்று ஊக்கப்படுத்தும்
ஆட்கள் இருக்கும்வரை
இட்லிக்கா பஞ்சம் வரப்போகிறது?


உடல் நலனுக்குக் கேடு விளைவிக்காத
இட்லியை அவித்து அசத்துங்கள்.
புதிது புதிதாக சமைத்த மகிழ்ச்சியும்
கிடைக்கும்.

வீட்டிலுள்ளவர்களும் பாராட்டுவார்கள்.

குழந்தைகளும் 
நித்தம் நித்தம் இந்த இட்லி தானா?
என்று சலித்துக் கொள்ளாமல் 
மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

இட்லி நாளில் வகைவகையான
இட்லி அவித்து அசத்துவோம்.


Comments

Popular Posts