பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை....

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை....


"பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது"

                          குறள் : 811


பருகுவார் - குடிப்பவர்,அருந்துபவர்
போலினும் -போன்று இருந்தாலும்
பண்பிலார்- நற்குணமில்லாதார்
கேண்மை -நட்பு
பெருகலிற்- வளர்வதைவிட
குன்றல் - தேர்தல்,குறைந்து போதல்
இனிது- நன்று,இனிமையானது


மிகுந்த அன்பால் தம் கண்களால்
பருகுவதுபோல்  நெருக்கமாகப்
காணப்பட்டாலும் நற்பண்பு இல்லாதவரோடு
கொண்டிருக்கும் நட்பு வளர்வதை விட
குறைந்து போதலே இனிமை தருவதாகும்.

விளக்கம்:

மிகுந்த அன்பு உள்ளதுபோல
காட்டிக் கொள்வதற்காக சிலர்
நம்மிடம் மிகவும் நெருங்கிப் பழகுவர்.
ஆனால் அவரிடம் உண்மையான 
அன்பு இருக்காது.
நற்பண்பு உள்ளவர்களிடம் போலியான
எந்த செயலும் இருக்காது.

நற்பண்பு இல்லாத ஒருவர்
எவ்வளவுதான் நெருக்கம் காட்டினாலும்
அந்த நட்பை வளர்த்துக் கொள்ள
வேண்டும் என்று நினைத்தல் கூடாது.
அது வளர்வதிலும் தேய்ந்து போதலே 
இனிமை தருவதாக
இருக்கும்.

நம்மையே தூக்கிச் சாப்பிட்டுவிடுவதுபோல
உருகி உருகி அன்பைப் பொழியும்
ஒருவரிடம் நல்ல குணநலன்கள்
இல்லாதிருக்குமானால் அவருடைய நட்பில்
உண்மை இருக்காது என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது தீய குணம் உடையவர் நட்பில்
ஒருபோதும் உண்மை இருக்காது.
அவர்கள் தக்கத் தருணம் பார்த்து
நம்மையும் தீமையில் விழ வைப்பர்.
அவர்களிடம் உள்ள நட்பை வளர்த்துக்
கொள்வதைவிட விலகி 
இருப்பதே நன்று என்கிறார் வள்ளுவர்.

English couplet:

"Though evil men should all-absorbing friendship show
Their love had better die away than grow"

Explanation:

The decrease of friendship with those who look as if they
would eat you up  through excess of love while
they are really destitute of goodness is far
better than its increase.

Transliteration:

"Paruguvaar polinum panpilaar kenmai
Perukalir kuntral inidhu"




.

Comments

Popular Posts