சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி....


சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி....


சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்"

         குறள் : 306


சினம் --வெகுளி ,கோபம்
என்னும் - என்று சொல்லக்கூடியது
சேர்ந்தாரை -நெருக்கமாக இருப்பவரை
கொல்லி- கொல்லும் தன்மையுடையது
இனம் - தன்னைச் சார்ந்தோர்
ஓமம் - பாதுகாப்பு
புணையைத்  - தெப்பத்தைச்
சுடும்- சுட்டெரித்து விடும்

 தம்மைச் சார்ந்தவரையும் அழிக்கும்
தன்மை கொண்ட நெருப்பு போல சினமானது
ஒருவனின்  பாதுகாப்பு என்று கருதக்கூடிய
இன்பத்தெப்பத்தையே சுட்டழித்துவிடும்.


விளக்கம்:

நெருப்பு  வைத்தவனைச் சுடும்.
நெருப்பு வைத்தவன் அருகில் 
இருப்பவனையும் சுடும்.
அதுபோல சினமானது சினம் கொண்டவனையும்
சுடும்.
சினம் கொண்டவனோடு சேர்ந்திருப்பவரையும்
சுட்டெறித்துவிடும்.

இங்கே நெருப்பும் சுடும்.
கோபமும் சுடும் என்கிறார் வள்ளுவர்.
ஒருவனுடைய முன்னேற்றத்திற்குத்
தடையாகிருப்பது சினம்

இனம் என்பது உற்றார் உறவினர்.
இனம் என்பதை  ஏமப்புணைக்கு உருவகப்படுத்திக்
காட்டியுள்ளார் வள்ளுவர்.

சினம் கொண்டவரின் செயல்
பிறர் மீது எறிவதற்காக நெருப்பைக்
கையியில் அள்ளுவது போன்றது.
நெருப்பு அள்ளியவரைச் சுடாமல்
விடாது.
அது போன்றதுதான் சினம்.
என்ன நோக்கத்திற்காக சினம் கொண்டீர்களோ
அதைப்பற்றி எல்லாம் சினத்திற்குக்
கவலையில்லை.
உங்களையும் அழிக்கும்.
உங்களோடு சேர்ந்தவர்களையும்
அழிக்கும்.

சினம் என்னும் நெருப்பு 
சினம் கொண்டவரை எரிப்பது மட்டுமன்றி
அவருக்குக் காப்புக் துணையான தோணியாக
இருந்துவரும் சுற்றத்தினரையும் அழித்துவிடும்
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

Wrath the fire  that slayeth whose draweth near will burn
the helpful raft of kindred near

Explanation :

The fire of anger will burn up even the pleasant raft of
friendship.

Transliteration :

sinamennum saerndhaaraik kolli inamennum
Emap punaiyaich sudum

இந்தப் பாடல் ஏகதேச உருவக அணிக்கு 
எடுத்துக்காட்டாகும்.

Comments

Popular Posts