உருவக அணி -ஏகதேச உருவக அணி







உருவக அணி-ஏகதேச உருவக அணி


உருவக அணி மற்றும் ஏகதேச உருவக அணி
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று
பார்ப்பதற்கு முன்னால் இரண்டு அணிகளையும்
பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்வோம்.


உருவக அணி:

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு
என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே
என்பது போன்று
கூறுவது உருவக அணி எனப்படும்.

அதாவது ஒரு கவிஞர் ஒரு பொருளை சிறப்பித்துப்
சொல்ல விரும்புகிறார்.
அதற்காக வேறொரு பொருளை உவமையாக
எடுத்துக் கூறி அதோனோடு ஒப்புமைபடுத்திக்
கூறுவார்.
அந்த உவமையின் தன்மையைச்
சொல்ல வந்தப் பொருளின்மீது
ஏற்றிக் கூறுவது உருவகம் எனப்படும்.

"இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டும் வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்"

இப்பாடலில்

இன்சொல் விளைநிலமாக
ஈதல் விதையாக
வன்சொல் களையாக
வாய்மை. எருவாக
அன்பு நீராக
அறம் கதிராக
அப்படியே உருவகப்படுத்திச்
சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு முற்றிலும் உருவகப்படுத்திக் 
கூறப்பட்டுள்ளதால்
இது உருவக அணியாயிற்று.


ஏகதேச உருவக அணி

இரண்டுபொருள்களில் ஒன்றை மட்டும்
உருவகப் படுத்திவிட்டு மற்றொன்றை உருவகப்
படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவது
ஏகதேச உருவக அணி எனப்படும்.


"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்"

கருமம் கட்டளைக்கல்லாயிற்று.
அதாவது மக்களின் செயலுக்கு உரைகல்
உருவகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் பெருமை, சிறுமை
இரண்டுக்கும் எந்தப் பொருளையும் உருவகப்படுத்
சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார் வள்ளுவர்.

இவ்வாறு ஒன்றை உருவகப்படுத்தி
விட்டு மற்றொன்றை உருவகப் படுத்தாமல்
விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி
எனப்படும்.

"
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்"

சினம் கொண்டவரையே அழிக்கக் கூடியதாக
சினம் இருப்பதால் அந்த சினமானது 
அவரைமட்டுமன்றி அவரைப் பாதுகாக்கும்
சுற்றத்தையும் அழித்துவிடும்.

"பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளருக்கும்
எணியத் தேய்க்கும் சென்று"

பொருளைப் பொய்யா விளக்கு என்று
உருவகப்படுத்தி விட்டார்.
பகையை இருள் என்று உருவகப்படுத்தவில்லை.
நாம்தான் பகை இருள் போன்றது
என்று ஊய்த்துணர்ந்து கொள்ள வேண்டும்.

புலவர் இரண்டு பொருள்களைப் பற்றி
கூற நினைக்கிறார். ஆனால் ஒன்றை கூறிவிட்டு 
இன்னொன்றைக்
கூறாமல் நமது தேர்வுக்காக விட்டுவிடுகிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார்
இறைவனடி சேராதார்.


நினைவில் கொள்க.


உருவக அணியில் சொல்லவந்த பொருள்
முழுமையாக இன்னொரு பொருளாக
உருவகப்படுத்தி சொல்லப்பட்டிருக்கும்.

ஏகதேச உருவக அணியில் சொல்லவந்த
பொருள்களில் ஒன்று மட்டும்
உருவகப்படுத்தப்பட்டிருக்கும்.
மற்றவை உருவகப்படுத்தப்பட்டிருக்காது.
நாம் உய்த்துணர வேண்டும்.
sinamennum saerndhaaraik kolli inamennum
Emap punaiyaich sudum


இந்தப் பாடல் ஏகதேச உருவக அணிக்கு எடுத்துக்காட்டாகும்.

Comments

Popular Posts