மணிநீரும் மண்ணும் மலையும்....
மணிநீரும் மண்ணும் மலையும்....
"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்"
குறள் : 742
மணிநீரும்-தெளிந்த நீரும்
மண்ணும் - நிலமும்
மலையும்- மலைப் பகுதியும்
அணி- அழகு,குளிர்ச்சி
நிழற்-நிழல்
காடும்- காட்டுப் பகுதியும்
உடையது - கொண்டது
அரண் - கோட்டை, பாதுகாப்பு
தெளிந்த நீரும் வெட்டவெளியான நிலமும்
மலையும் குளிர்ச்சியான நிழல் தரு
காடும் கொண்டதே அரண் ஆகும்.
விளக்கம்:
மணி நீர் என்றால் நீல நிறம் கொண்ட நீர்.
அதிகமான ஆழமுடைய பகுதிகளில்
கிடக்கும் நீர் எப்போதும்
நீல நிறமாகவே காணப்படும்.
இது கடலாகவும் இருக்கலாம்.
நீர்த்தேக்கங்கள், கிணறு ஆகிய
இடங்களில் கிடக்கும் நீராகவும் இருக்கலாம்.
எது எப்படியோ நீர் நல்ல பாதுகாப்பு அரண்.
ஆதலால் மணிநீர் என்று சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது மண் .
பரந்து விரிந்து
கிடக்கும் நிலப்பகுதியும்
ஒரு பாதுகாப்பு அரணாகவே
கருதப்படும். நிலப்பரப்பு மிகுந்திருக்க
வேண்டும்.
மூன்றாவதாக மலை.
மலை ஒரு நாட்டிற்கு இயற்கையாக
அமைந்த பாதுகாப்பு அரண்.
இயற்கை வளங்களை அள்ளித்
தருவதோடு எதிரிகளிடமிருந்தும்
நாட்டைப் பாதுகாக்கிறது.
நான்காவதாக காடு.
வெறுமனே காடு என்று சொல்லாமல்
அணி நிழற் காடு என்கிறார் வள்ளுவர்.
அணி நிழற் காடு என்றால்
குளிர்ச்சியான நிழலைத் தரக்கூடிய
அழகிய காடு . இந்த காட்டுப் பகுதி மிகுதியாக
இருந்தால் ஒரு நாட்டிற்குள்
பகைவர் எளிதாக உட்புகுந்துவிட முடியாது.
அதனால் காடும் ஒரு பாதுகாப்பு அரணாகவே
கருதப்படுகிறது.
காடு காவற்கோட்டையாக நின்று
நாட்டைக் காக்கும்.
நீலமணி போன்ற நீர்நிலையும்
வெட்ட வெளியான நிலமும்
மலையும்
நிழல்தரு காடும்
ஆகிய நான்கும் நாட்டிற்கு அரணாகும்
என்கிறார் வள்ளுவர்.
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு
அரணாக இருப்பது மட்டுமல்லாது
பொருளாதார பாதுகாப்பு அரணாகவும்
இந்த நான்கும் இருக்கும் என்று
இருவேறு பொருள் கொள்ளும்படியாக
அமைந்துள்ளது இந்தக் குறள்.
English couplet :
"A fort is that which owns fount of waters crystal clear
An open space, a hill and shade of beauteous forest near"
Explanation:
A fort is that which has everlasting water,
plains, mountains and cool shady forests.
Transliteration :
"Manineerum mannum malaiyum aninizhar
Kaatum utaiya tharan"
Comments
Post a Comment