குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்....!..
குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்....
குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு"
குறள் :1025
குற்றம் - தவறு
இலாதவனாய் -செய்யாதவனாய்
குடி செய்து - குடும்பம் நடத்தி,ஆட்சி நடத்தி
வாழ்வானை- வாழ்கின்றவனை
சுற்றமாச் - உறவினராக,கிளைஞராக
சுற்றும்- சூழ்ந்து கொள்வர்
உலகு- உலக மக்கள்
தவறானச் செயல்கள் செய்யாதவராக
தன் குடிமக்கள் நலத்திற்காக வாழ்பவனை
இவ்வுலகத்தில் உள்ளவர்கள் தம்
சுற்றமாக எண்ணி அவரைச்
சூழ்ந்து வாழ்வர்.
விளக்கம்:
எந்தவிதத் தவறான செயல்களிலும்
ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
தன் குடிமக்கள் நலத்திற்காக மட்டுமே
வாழ்பவனாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட குணம்
கொண்டோனை இவ்வுலக மக்கள்
யாவரும் உறவாக எண்ணி கொண்டாடி
மகிழ்வர்.
யாருக்கும் அவர் அந்நியராக இருக்க மாட்டார்.
அனைவரும் அவருக்குக் கிளைஞர்கள்தான்.
மாறுபாடு கொள்ளாத இடத்தில்
வேறுபாடு இருக்காது. வேறுபாடு
இல்லை என்றால் போட்டி பூசல்
பொறாமை எதுவுமே இருக்காது.
அனைவரும் நம்மவர் என்ற
உயர் பண்பு குடி கொண்டிருக்கும்.
அனைவரையும் நம்மவராக
அரவணைத்துச் செல்லும் நற்பண்பு
குடிகொண்டுவிட்டால் உலகமே அவரை உறவாக
எண்ணிக் கொண்டாடி மகிழும்.
சுற்றமாகச் சூழ்ந்து வாழும்
என்கிறார் வள்ளுவர்.
English couplet :
"With blameless life who seeks to build his race's fame
the world shall circle him and kindred calm"
Explanation :
People will eagerly seek the friendship of the prosperous
soul who has raised family without foul means.
Transliteration :
"Kutram ilaanaaik kutiseydhu vaazhvaanaich
Chutramaach chutrum ulaku"
Comments
Post a Comment