இன்மையுள் இன்மை விருந்தொரால்....

இன்மையுள் இன்மை விருந்தொரால்...


"இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை"

                                                குறள் : 153

இன்மையுள்-இல்லாமைகளுள்
இன்மை - இல்லாமையாவது
விருந்து- விருந்தினர்
ஒரால்- ஒருவுதல்,விலகுதல்
வன்மையுள்-வலிமைகளுள்
வலிமை-வலிமையாவது
மடவார்-அறிவில்லாதவர்
பொறை- பொறுத்துக்கொள்ளல்



வறுமையுள் கொடிய வறுமை வந்த
விருந்தினரை வரவேற்க முடியாமையாகும்.
அதுபோல வலிமையுள் வலிமை என்பது
அறிவில்லாதவர்களின் செயலைப்
பொறுத்துக்கொள்வதேயாகும்.


விளக்கம்: 

விருந்து எதிர்கொள்ளல்
தமிழர்களின் தலையாயக்
பண்புகளும் ஒன்று.
அதனை ஒருவன் தவிர்க்கும்படியான
சூழல் ஒருவனுக்கு ஏற்பட்டிருந்தால்
அது மிகவும் கொடுமையானது.


 தனது இயலாமை அதாவது
இல்லாமையால் தான் விருந்தினர்
வருகையை ஒருவன் புறக்கணிப்பான்.
 வீட்டில் போதிய வசதிகள்
இல்லாதபோது தான் விருந்தினரைத்
 தவிர்க்க வேண்டும்
என்ற எண்ணம் ஏற்படுகிறது.
அதற்காக மனம் நொந்து நூலாகிப்போகும்.
இப்படிப்பட்ட நிலைமை
இல்லாமையால் ஏற்படும் இன்னாமை
எல்லாவற்றிலும் கொடிய இன்னாமையாம்.

அதுபோல வலிமைகளுள் மிகவும் உறுதியான
 வலிமை எது என்றால் அறிவில்லாதவர்கள்
 தம் அறியாமையால் செய்யும்
 தவறுகளைப் பொறுத்துக் கொள்வதாகும்.
நல்ல மன வலிமை உள்ள ஒருவரால்
மட்டுமே அறிவிலிகள் செய்யும்
அறிவுக்கு ஒவ்வாத செயல்களைப்
பொறுத்துக்கொள்ள முடியும்.
 

இன்மையிலும் இன்மை என்பது
விருந்தினரைத் தவிர்ப்பதாகும்.
வலிமையிலும் வலிமை அறிவற்றவர்கள்
தம் அறியாமையால் செய்யும் தவறுகளைப்
பொறுத்துக் கொள்வதாகும் என்கிறார்
வள்ளுவர்..

English couplet :

"The sorest poverty is bidding guest unfed depart
The mightiest might to bear with men of foolish heart"

Explanation :

To neglect hospitality is poverty of poverty.
To bear with the ignorant is might of might.

Transliteration:

""Inmaiyul inmai virundhoraal vanmaiyul
Vanmai matavaarp porai"

Comments

Popular Posts