அறிவின்மை இன்மையுள் இன்மை....

அறிவின்மை இன்மையுள் இன்மை....


"அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை 
இன்மையா வையா துலகு "

                        குறள்.   :841

அறிவின்மை- அறிவு இல்லாமை
இன்மையுள்-.    இல்லாமைகளுள்
இன்மை-இல்லாத தன்மை
பிறிதின்மை-.  பிற இல்லாமைகள் 
இன்மையா-இல்லாமையாக
வையாது -கொள்ளாது
உலகு-உலகத்து மக்கள்

இன்மைகளுள் கொடிய இன்மை
அறிவின்மையே  ஆகும்.
வேறு இல்லாமைகளை எல்லாம்  மக்கள்
ஒரு இல்லாமையாகவே கருதமாட்டார்.


விளக்கம்:

பொருள் இல்லை. உணவு இல்லை.
உடை இல்லை. உறையுள்  இல்லை.
வீரம் இல்லை. துணிவு இல்லை.
நட்பு இல்லை.புகழ் இல்லை.
இப்படி எத்தனையோ இல்லைகளைக்
கண்டிருப்போம். கேட்டிருப்போம்.

அது ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை.
அவற்றையெல்லாம் அறிவிருந்தால்
ஈட்டிக் கொள்ளலாம் 
ஆனால் ஒரே ஒரு இல்லை மட்டும்
இல்லாமல் இருத்தல் கூடாது.
அதுதான் அறிவின்மை.
அறிவின்மை மட்டுமே இல்லாமையாக
கருதப்படும்.

அறிவில்லாதிருந்தால் என்ன இருந்தாலும் அது
இல்லாமலாகிவிடும்.
அறிவை ஆளத்தெரிய வேண்டும்.
அது இல்லை என்றால் வறுமை தான்
வந்து சேரும்.

"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்"
என்ற குறளில் அறிவுடையவர் மட்டுமே
எல்லாம் உடையவர் என்று வள்ளுவர்
உறுதிபடக் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

 அறிவின் துணைகொண்டு மற்ற
 இல்லாமைகளைப்
 போக்கிவிடலாம்.அதனால் 
 அறிவுடையவர் மற்ற இல்லாமைகளை
 எல்லாம் ஒரு பொருட்டாகவே 
 கருத வேண்டியதில்லை.
 அறிவு மட்டும் இருந்தால் போதும்.
 
பிறிதின்மை என்பது அறிவின்மையைத்
தவிர மற்ற எல்லா இன்மைகளும்
என்று பொருள் கொள்ளப்படும்.

இன்மைகளுள் பெரிய இன்மை
அறிவின்மை.பிறிதின்மை இல்லாமை என்று
உலகத்தாரால் கருப்பட மாட்டாது.

English couplet:

"Want of knowledge,  'mid  all wants the sorest want
we deem
When of other things the world will not as want esteem"


Explanation:

The want of wisdom is the greatest of all wants,
but that of wealth the world will not regard as such.

Transliteration :

"Arivinmai inmaiyul inmai pridhinmai
Inmaiyaa vaiyaa thulaku"

Comments

Popular Posts