யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை....

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை...!"யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற "

                  குறள் :    300

யாம் -நான்
மெய்யாய்- மெய்யாக
கண்டவற்றுள்-அறிந்தவற்றுள்
இல்லை-காணப்படவில்லை
எனைத்தொன்றும்-வேறு ஏதேனும்
வாய்மையின்-உண்மையினும்
நல்ல - நல்லன
பிற -மற்றவை


நான் மெய்யாக அறிந்தவற்றுள்
மெய்மையைக் காட்டினும் வேறு ஏதேனும்
சிறந்ததாகச் சொல்லத் தக்கது
வேறு எதுவும் இல்லை.

விளக்கம்:

வாய்மையே எல்லா அறங்களிலும்
தலையாய அறமாகக் கருதப்படுகிறது.
வாய்மையை ஒரு ஒழுக்க நெறியாக
கடைபிடித்துவருபவனிடம் வேறு எந்தத்
தீய குணமும் அண்டாது.
பொறாமை இருக்காது.
புறங்கூறும் பண்பு கிடையாது.
திருட்டு இருக்காது.
யாரிடமும் சினம் கொள்ள மாட்டான்.
குற்றங்களில் ஈடுபட அஞ்சுவான்.
தன்னால் ஒப்புக்கொள்ளத்தக்க செயலை
மட்டுமே செய்வான்.
அவனுடைய நெஞ்சம் எப்போதும்
தூய்மையாகவே இருக்கும்.
நெஞ்சத்தைத் தூய்மை செய்யும்
வாய்மைக்கு முன்னர் வேறு எந்த
அறமும் நிற்க முடியாது.
ஆதலால் வாய்மையே 
முதன்மையான அறம்.


அதனால்தான் யான் மெய்யாய்க் 
கண்டவற்றுள் இல்லை 
வாய்மையின் நல்ல பிற என்று தானே முன் வந்து
நின்று பேசுவதுபோல பேசி
நான் தேர்ந்து அறிந்துகொண்டேன்;
வாய்மையே தலையாய
அறம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்
வள்ளுவர்.

 நான் மெய்யாக அறிந்தவரையில்
வாய்மையினும் நல்ல பொருள்
வேறு எதுவும் இல்லை  .

English couplet:

"Of all good things we've scanned with studios care, there's
nought that can with truthfulness compare"

Explanation:

Amidst all that we have seen described as real excellence
there is nothing so good as truthfulness.

Transliteration :

"Yaameyyaak kantavatrul illai enaththondrum
Vaaimayin nalla pira"


Comments

Popular Posts