சின்னப்பிள்ளை
சின்னப்பிள்ளை
சாதனைப் பெண்ணிவர்
சாதிக்கப் பிறந்தவர்
சரித்திரம் அறியாதவர்
சரித்திரம் ஆனவர்
விசித்திரம் இவர் ஒரு
விந்தைப் பெண்மணி
பள்ளி என்பதைப்
பாலியத்தில் கண்டதில்லை
வெள்ளி முளைக்குமுன்னே
துள்ளி நடைபோட்டார் காட்டினிலே
கள்ளிக் காட்டிடையே
வள்ளியிவர் தடம் பதித்தார்
கிராமத்துத் தலையெழுத்தை
மராமத்து செய்ய வந்தார்
ஊடகம் நுழையா கிராமத்தை
பாரதம் காண வைத்தார்
உலகம் முழுவதும்
பெண்களுக்கான செய்தி தந்தாய்
யாரிவர் யாரிவரென
கேட்டவர் வாய் மூடும் முன்னே
பாரதத்துத் தலைமகனாம் வாஜ்பாயைத்
தன் காலில் விழ வைத்து
ஒட்டு மொத்த பார்வையையும்
ஒருநொடியில் தன் மேல்
விழ வைத்த
சின்னப்பிள்ளை ஒரு சாதனைப் பெண்மணி
சரித்திர நாயகி!
( பள்ளி தகவல் பலகையில் மாணவர்களுக்காக பதிவிட்ட கவிதை)
Comments
Post a Comment