முதுமொழிக்காஞ்சியின் சிறந்தப் பத்து

முதுமொழிக்காஞ்சியின் 

சிறந்த பத்து

முதுமொழிக்காஞ்சியின் முதலாம் பத்து
சிறந்தப் பத்து எனப்படும்.

மதுரை கூடலூர் கிழார் 
 முதுமொழிக்காஞ்சியின்
முதலாம் பத்தில் எவை எவை சிறந்தவை என்று வரிசைப்படுத்தி தனது நூலை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சிறந்தப் பத்தின் பாடல்கள் உங்களுக்காக...

1. "ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை"


கடல் சூழ்ந்த உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்து

ஒழுக்கம் உடைமையாகும்.


2. "காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்"

பிறர் தன்மேற் செய்யும் காதலினும் சிறந்தது கற்றவர்மீது கொண்ட மரியாதை காரணமாக அவருக்கு அஞ்சி நடத்தலாகும்.


3. "மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை"

மதியுடைமையினும்   மிகவும் சிறபாகக் கருதப்படுவது  தான் கற்றவற்றை மறவாது கடைப்பிடித்து ஒழுகுதலாகும்.


4. "வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை"

செல்வத்தினும் மிகவும் சிறப்புடையது

உண்மையாக இருப்பதாகும்.


5."இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை"

இளமையாக இருப்பதை விடவும் மிகவும் சிறப்புடையது யாதெனில் உடற்பிணி இல்லாது

நலமுடன் வாழ்வதாகும்.


6. "நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று"


அழகைவிடவும்  மிகச் சிறப்புடையது நாணம் ஆகும்.

7. "குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று"


நல்ல குலத்தில் பிறந்தலை விடவும் மிக்கப் சிறப்புடையது கற்புடைமை ஆகும்.


8. "கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று"


கற்பதை விடவும் மிகவும் சிறந்தது  கற்றவரைப் போற்றி வணங்குதலாகும். 


9. "செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று"


பகைவர்மீது பகை கொள்வதிலும்   மிக்கச் சிறப்புடையது தன்னை வலியைப்படுத்திக் கொள்வதாகும்.


10. "முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று"

செல்வம் முன்பு பெருகிப் பின்னர் அழிதலைவிட  இருக்கும் நிலையிலிருந்து குறைவுபடாமை சிறப்புடையதாகும்.


(தொடரும்)


Comments