பிறந்தநாள் வாழ்த்து


பிறந்தநாள் வாழ்த்து 



பணி முதல்நாள் 

மாதுங்கா பள்ளியில் 

மலங்க மலங்க

நான் விழிக்க

பாசமாய் இரு விழிகள்

எனை நோக்க

இதழ் விரிந்தும் விரியாமலும்

உதடுகள் புன்னகை  பூக்க

'என்னம்மா' என்று 

ஹெலன் டீச்சர் அழைத்தபோது

மலர்ந்த  இந்த

முதல் காதல்

என்றென்றும் வாடாமலராய்

இன்றுவரை தொடர்வதை

 நினைக்கையில்

கண்கள் பனிக்க

உள்ளம் உவக்க

சொற்கள் தொண்டைக்குள் சிக்க

ஊமையாய்  நின்றிருந்த

நாட்கள் நினைவில் ஓட

வந்ததிந்தப் பிறந்தநாள்

வாழ்த்துரைக்க உள்ளம் உந்த

ஓரிரு சொல்லெடுத்து

அன்பெனும் நார்தொடுத்து

பாவணி புனைந்து

தாரணி சூட்டி

அணியம் செய்ய ஆவலாய்

நானும் வந்தேன்

கொஞ்சும் நலம் கொண்டு

நெஞ்சம் விழைவன கண்டு

கஞ்சமில்லா அன்பைப் பொழிந்து

தஞ்சம் இறையென மகிழ்ந்து

நுவலவொண்ணா

நலங்களை நுகர்ந்து

வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 

பல்லாயிரம் ஆண்டு 

இன்று போல

என்றென்றும்  

என் உள்ளத்தில் நிறைந்து!


        -செல்வபாய் ஜெயராஜ் 







Comments