முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி


முதுமொழிக் காஞ்சி என்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருள் உடையது.. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும்

சொல்.பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல்

என்பதால்  இது முதுமொழிக் காஞ்சி என

அழைக்கப்படுகிறது.


முதுமொழிக்காஞ்சியை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார் என்பவராவார்.

கூடலூர் இவர் பிறந்த ஊராக இருக்கலாம். பின்னர் இவர் தமிழ் வளர்த்த மதுரையில் புகுந்து வாழ்ந்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கூடலூர் கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று சொல்கின்றனர்.


இந்நூல் பத்துப் பத்துக்களாக வகைப்படுத்தப்பட்டு மொத்தம் நூறு பாடல்கள் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகள் உள்ளன. ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகிறது.. 


 ஒவ்வொரு பத்துப் பாடல்களின்

 அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு அந்தப் பத்துப் பாடல்களும் தனித்தனியாக 

தலைப்பிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறு வகைப் படுத்தப்பட்ட

பால் தலைப்புகளாவன


1. சிறந்த பத்து

2. அறிவுப் பத்து

3. பழியாப் பத்து

4. துவ்வாப் பத்து

5. அல்ல பத்து

6. இல்லைப் பத்து

7. பொய்ப் பத்து

8. எளிய பத்து

9. நல்கூர்ந்த பத்து

10. தண்டாப் பத்து


என்பனவாகும்.


''சிறந்தன்று 'என்ற ஒற்றைச் சொல் கொண்ட பத்துப் பாடல்களும் சிறந்த பத்தில்

இருக்கும்.


'அறிப' என்ற ஒற்றை சொல்லால் 

அறிவுப் பத்து வகைப் படுத்தப்பட்டுள்ளது.


'பழியாது என்றசொல் மூன்றாம் பத்தின் எல்லாப் பாடல்களிலும் உள்ளதால் மூன்றாம் பத்து பழியாப் பத்து எனப்படுகிறது.


நாலாம் பத்து 'துவ்வாது 'என்ற சொல்லால் பெயர் பெற்றுள்ளது.


'அன்று' என்ற சொல் அல்ல பத்தின் அனைத்துப் பாடல்களையும் அணியம் செய்கிறது


'இல்லை' என்ற சொல்லால் இல்லைப் பத்து அடையாளப்படுத்தப்படுகிறது.


'பொய்' என்ற சொல் ஏழாம் பத்தின் எல்லாப் பாடல்களிலும் இடம்பிடித்துள்ளது.


'எளிது'  என்று முறுவுறும் சொல் எட்டாம் பத்தில் காணப்படுகிறது


'நல்கூர்ந் தன்று ' என்ற சொல் ஒன்பதாம் பத்தின் பத்துப் பாடல்களிலும் உள்ளதால்

நல்கூர்ந்தப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது.


'தண்டான்' என்ற சொல்லால் தண்டாப் பத்து

நிறைவு பெறுகிறது.


இந்த முறையில் பயிலப்படும் சொற்களால் பத்துப் பத்துப் பாடல்களாக வகைப்படுத்தப்பட்டு முதுமொழிக்காஞ்சி அணியம் செய்யப்பட்டுள்ளது .

















Comments