பணி நிறைவு பாராட்டு
பணி நிறைவு பாராட்டு
கரும்பலகையில்
கண்களைத் திரட்டி
கவினூட்டி
கற்கும் திறனூட்டி
சிந்தையில் உவகை ஊட்டி
செந்தமிழ்ச் சுவையூட்டி
முத்தமிழ் நடைகூட்டி
நாளைய தலைவர்களை
மெருகூட்டி
கற்பிதலுக்குச் சிறப்பூட்டி
நல்லாசானாய் மதியூட்டி
நல்லாளுமை எனும் பெயரீட்டி
நல்லோரால் பாராட்டி
பணிக்கு அழகூட்டி
பணி நிறைவுபெறும்
ஆசிரியைகள்
தமிழ்ச்செல்வி
பாக்கியலதா
இருவரும்
ஓய்வின் மகிழ்வை
நாளும் நுகர்ந்து
நலமுடன் நன்றாய் வாழ
ஆண்டவன் அருள் கரம்
உடனிருந்து வழிநடத்த
உளமார வாழ்த்துகிறேன்!
Comments
Post a Comment