திருவருகைக்காலமும் மெழுகுவர்த்தியும்
திருவருகைக் கால மெழுகுவர்த்தி கதை
"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் வெற்றியுள்ளவரும், தாழ்மையானவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய குட்டியின்மேலும் ஏறிவருகிறார்." (சகரியா 9:9)
கிறிஸ்துமஸ் நாட்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன.
இன்றுமுதல் அட்வென்த் அதாவது
திருவருகைக்காலம் தொடங்கிவிட்டது.
கிறிஸ்துமஸ் நாட்களுக்கு முன்னர் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் அட்வென்த் ஞாயிறாகக் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் மாமிச வகைகளை உண்ணாமல் இருப்பதுண்டு.
கிறிஸ்துவின் வருகை குறித்த தியானங்களையும் பஜனைகளையும் நடத்தி கிறிஸ்து வருகையை உற்சாகமாக எதிர்நோக்கியிருக்கும் காலமாக இந்தத் திருவருகைக் காலம் கருதப்படுகிறது.
அன்று விளக்குகளுடன் மணவாளனை எதிர் நோக்க பத்து கன்னியர் காத்திருந்தனர்.
அவர்களை போல இன்று மெழுகுவர்த்திகள் ஏற்றி மணவாளன் வருகைக்காக நம்மையே தயார் செய்யும் நாட்கள் தொடங்கிவிட்டன.
திருவருகைக் காலத்தில் தேவாலயங்களில் ஏற்றப்படும் ஐந்து மெழுகுவர்த்தியும் ஐந்து வகையான செய்திகளை முன்னறிவிப்பு செய்ய வருவதாக சொல்லப்படுகிறது.
வாருங்கள் அவை சொல்லும் செய்தி என்ன என்று பார்ப்போம்.
முதலாவது மெழுகுவர்த்தி ஏசாயாவையும் இயேசுவின் வருகையை முன்னறிவித்த பைபிளில் உள்ள பிற தீர்க்கதரிசிகளையும் குறிப்பதற்காக ஏற்றப்படுகிறதாம்.
இரண்டாவது மெழுகுவர்த்தி பைபிளைக் குறிடுவதற்காக ஏற்றப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
மூன்றாவது மெழுகுவர்த்தி இயேசுவின் தாயான மரியாளைக் குறிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
நான்காவது மெழுகுவர்த்தி
யோவான் ஸ்நாகனரைக் குறிப்பதற்காக ஏற்றப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
ஐந்தாவதாக நடுவில் உள்ள அல்லது தனி மெழுகுவர்த்தி கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்றப்படுகிறது, இது உலகின் ஒளியான இயேசுவைக் குறிக்கிறது.
ஜெர்மனியில் இந்த ஐந்தாவது மெழுகுவர்த்தி 'ஹெய்லிகாபெண்ட்' என்று அழைக்கப்படுகிறது, மேலும் கிறிஸ்தும்ஸ் ஈவ் நாளில் இந்த மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது.
இவ்வாறு திருவருகை வாரத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு மெழுகுவர்த்திக்கும் ஒரு கதை உண்டு.இந்த நாட்களில் தேவாலயங்களில்
ஏற்றப்படும் மெழுவர்த்திகள்
பைபிளில் குறிப்பிடப்பட்ட செய்திகளைச் சொல்ல வந்தது போல
அவற்றின் வண்ணங்களும்
ஒவ்வொரு செய்தியைப் சொல்வதாகக்
கூறுகின்றனர்.
முதலாவது நாள் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி பச்சை நிறம்.
ஆயத்தத்தைக் குறிக்கிறது.
இரண்டாவது நாள் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி நீல நிறமானது நம்பிக்கையைக் குறிக்கிறது.
மூன்றாவது மெழுகுவர்த்தி மஞ்சள் நிறம் .அன்பைக் குறிக்கிறது.
நான்காவது மெழுகுவர்த்தி வெள்ளை நிறம். அமைதியைக் குறிக்கிறது.
ஐந்தாவது மெழுகுவர்த்தி ஊதா நிறம். மனந்திரும்புதலைக் குறிப்பதாகக் கூறுவர்.
இதுபோல முற்றிலும் ஊதா நிற மெழுகுவர்த்திகளும் சில தேவாலயங்களில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர்.
பெரும்பாலான கிறிஸ்தவ குடும்பங்களில் ஊதா நிறத்தில் திருவருகைக் கால மெழுகுவர்த்தி வளையம் ஏற்படுத்தி வழிபாடு செய்வர்.
அதனால் ஊதா நிறத்திற்கும் திருவருகைக் காலத்திற்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு.
திருவருகைக் காலத்தில் குருமார்கள் ஊதா நிற தோளுடையும் மேலாடையும் அணிந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பீடத்தின் மேல் விரிப்பு மற்றும் நற்கருணைப் பேழை முன்புறம் உள்ள திரையும் ஊதா நிறத்தில் இருப்பதற்குக் காரணம் ஊதா நிறம் காத்திருப்பு மற்றும் கிறிஸ்து வருகைக்கான ஆயத்தத்தைக் குறிப்பதாக இருப்பதாலேயே என்று கூறுகின்றனர்.
எது எப்படியோ திருவருகைக் காலத்தில்.நாமும் திருவருகைக்கான கொண்டாட்டங்களை மெழுவர்த்தி ஏற்றி கொண்டாட ஆயத்தப் படுவோம்.வாருங்கள்
Comments
Post a Comment