முதுமொழிக்காஞ்சியின் அல்ல பத்து
முதுமொழிக்காஞ்சியின் அல்ல பத்து
முதுமொழிக்காஞ்சியின் ஐந்தாம் பத்து
அல்லப் பத்து எனப்படும்.
எவை எவை உலக மக்கட்கு உரியவை
ஆகாது என்று பத்துப் பாடல்களிலும்
பட்டியலிட்டு சொல்லியிருக்கிறார்
மதுரை கூடலூர் கிழார்.
அவர் எழுதிய அல்ல பத்து பாடல்கள் உங்களுக்காக
1"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்."
ஆரவாரம் மிக்க உலகில் வாழும் மக்கள்
அனைவருக்கும் சொல்வது யாதெனில்,
குடும்ப நிலைமை அறிந்து நடந்துகொள்ளாத மனைவி மனைவி அல்லள்.
2"தாரம் மாணாதது வாழ்க்கை அன்று."
மனை மாட்சி இல்லாத வாழ்க்கை, வாழ்க்கை அன்று.
3."ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று."
அன்பு இல்லாத உறவு நட்பு அன்று.
4."சோரக் கையன் சொல்மலை அல்லன்."
உதவி செய்ய நீளாக் கைகளைக்
கொண்டவன் புகழுக்கு உரியவன் அல்லன்.
5."நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்."
இதயத்தில் நண்பனுக்கு இடம் தராதவன் உண்மையான நண்பன் அல்லன்.
6."தேராமல் கற்றது கல்வி அன்று. "
தெளிவில்லாமல் கற்கும் கல்வி,
கல்வி அன்று.
7."வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று."
தான் வாழாமல் பிறர் வாழாமை கண்டு வருந்தும் வருத்தம், உண்மையான வருத்தமாக இருக்க முடியாது.
8."அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று. "
அறவழியில் ஈட்டிய பொருளாயினும் நற்செயல்களுக்குக் கொடுக்கப்படாத கொடை உண்மையான கொடையாக கருதப்பட மாட்டாது.
9."திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று. "
உரிய வழியில் கடைபிடிக்கப்படாத தவம் தவமாகக் கருதப்பட மாட்டாது.
10 "மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று. "
மறுபிறப்பு பற்றி அறியாமல் அடையும் முதுமையானது முதுமையாககருதப்பட மாட்டாது .
(தொடரும்)
Comments
Post a Comment