வினைவலியும் தன்வலியும்....

   வினைவலியும் தன்வலியும்.....
"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் "
                           குறள்   :  471

வினைவலியும் _ செயலின் வலிமையும்
தன் வலியும் _ தனது வலிமையும்
மாற்றான்  _பகைவன் 
வலியும் _ வலிமையும்
துணைவலியும் _ துணை நிற்பாரது ஆற்றலையும்
ஆய்ந்து _ அளந்தறிந்து ,ஆராய்ந்து 
தூக்கி _  சீர்தூக்கிப் பார்த்து
செயல் _  செயலில் ஈடுபடுக 

செய்யப்போகும் செயலின் வலிமை, 
தனது வலிமை, பகைவரின் வலிமை,
பகைவருக்குத் துணை நிற்பாரது ஆற்றல்
ஆகியவறின் அளவை சீர்தூக்கிப் பார்த்து
அதன் பின்னர் செயலில் ஈடுபட வேண்டும்.

விளக்கம்  : 

முதலாவது நாம் செய்யப் போகும் செயலைப்
பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக அந்தச் செயலைச்
செய்வதற்கான வலிமை தன்னிடம்
உள்ளதா என சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
தன்னைப்பற்றிய சுய பரிசோதனை வேண்டும்.
மூன்றாவதாக பகைவன் வலிமையைப்
பற்றிய முழு அறிவு பெற்றிருக்க வேண்டும்.
எதிராளியின் திறன் அறிந்தால் மட்டுமே நம்மால்
இது கூடுமா கூடாதா என்ற ஒரு முடிவுக்கு
வர முடியும்.
நான்காவதாக மாற்றானுக்குத் துணை நிற்பவர்
யார் யார் என்பதைப் பற்றிய தகவல்களையும்
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அவர்கள் திறன் பற்றியும் தெரிந்தால்தான்
முழுமையாக பகைவரின் திறன்பற்றி
அறிந்து கொள்ள முடியும்.
அதோடு மட்டுமல்லாமல் இந்த செயல்
செய்யப் போகும்போது தனக்குத்
துணை நிற்பவர் யார் யார் , அவர்களின் 
ஆற்றல் என்ன? என்பதைப்பற்றிய
ஆய்வும் செய்தல் வேண்டும்.
இத்தனை ஆய்வுக்குப் பின்னரே நாம்
இந்தச் செயலில் இறங்கலாமா கூடாதா
என்ற ஒரு முழு அறிவும் நமக்குக்
கிடைக்கும்.

பலம் ,பலவீனம், அதை செயல்படுத்துவதற்கான 
வாய்ப்பு, அப்படி நாம் செயலில் 
இறங்கும்போது எழப்போகும் எதிர்ப்பு 
ஆகியவற்றைப் பற்றி
தெரிந்த பின்னர் ஒரு செயலில் 
ஈடுபட்டால் மட்டுமே வெற்றி கிட்டும்.

எனவே ஒரு செயலில் ஈடுபடுவதற்கு
முன்பு இந்த நான்கு திறன்களையும்
பற்றி அறிந்து வைத்துக் கொண்டு நம்
திறனுக்கு இது சாதகமான வாய்ப்பாக
இருக்கும் என்று தெரிந்த பின்னரே செயலில்
ஈடுபட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

English couplet : 

"The force the strife demands the force he owns,
the force of foes , the force of friends,
these should we weigh ere to the war he goes"

Explanation : 

Let one weigh well the strength of the deed
he purposes to do , his own strength,, the
strength of his enemy, and the strength of the allies
of both and then let him act.

Transliteration :

"vinaivaliyum thanvaliyum maatraan valiyum
thunaivaliyum thookkich cheyal "

Comments

Popular Posts