ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்

ஆற்றுவார் ஆற்றல்....


"ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
 மாற்றுவார் ஆற்றலின் பின் "     ( குறள் : 225 )
 
ஆற்றுவார் _  தவம் செய்ய வல்லவருக்கு
ஆற்றல்  _  வலிமை தருவது
பசியாற்றல் _ பசியைப் பொறுத்தல்
அப்பசியை. _  அந்தப் பசியை
மாற்றுவார்  _ ஒழிப்பவர்
ஆற்றலின்  _  வலிமைக்கு
பின் _     பிறகு

தவ வலிமை உடையவருக்கு வலிமையாவது
யாதெனில் பசியைப் பொறுத்துக்  கொள்ளுதலாகும்.
அதுவும்  பசித்திருக்கும் ஒருவருக்கு உணவளித்து
தீர்பபவரின் வலிமைக்குப் பிற்பட்டதாகவே
கருதப்படும்.
 
விளக்கம் :

உடலை வருத்திக் கொண்டு சாப்பிடாமல் 
 நோன்பு இருத்தல் நன்று.
எனினும் பட்டினியாய் இருக்கும் ஒருவருக்கு 
உணவளித்தலே எல்லா நோன்புகளை விடவும்
சிறந்ததாக கருதப்படும்.பிறர் பசியாய் இருக்க 
அவருக்கு உணவளிக்காது நோன்பு 
இருக்கிறேன் என்ற பெயரில்
பட்டினியாய்க் கிடப்பதில் எந்த பலனும்
இல்லை என்பது வள்ளுவரின் கருத்து.

நோன்பைவிடப் பெரிய நோன்பு 
பட்டினியாய் கிடக்கும் ஒருவருக்கு
உணவளிப்பதுதாங்க..
முதலாவது பசிப்பிணி போக்குங்க...
கண்முன்னே யாரும் உணவின்றி கிடப்பதைப்
பார்த்தும் பாராமல் நானும் நோன்பு இருக்கிறேன்
என்று போலியாக வாழ்வதில் ஒரு அர்த்தமும்
இல்லை. அதனால் ஒரு நன்மையும்
கிடைக்கப்போவதில்லை.
நோன்பின் பலனைப் பெற்றுக்கொள்ள
வேண்டுமானால் முதலாவது 
உண்மையாகவே பசியால் வாடும் ஒருவருக்கு
உதவுங்கள்.

பசியைப் பொறுத்துக் கொண்டு 
உண்ணா  நோன்பை கடைபிடித்தலைவிட
பசித்திருக்கும் ஒருவருக்கு உணவளித்தலே
மிகச்  சிறந்த நோன்பாக இருக்கும்.

 Translation : 

"   Mid devotees they're great who hunter's pangs sustain
   Who hunter's pangs relieve a higher merit gain "

Explanation :

The power of those who perform penance is
 the power of enduring hunger. 
 It is inferior  to the power of those who 
 remove the hunger of others.

Transliteration:

" Aatuvar Aatral pasiaatral Appasiyai 
 Maatruvar Aatralin pin"
 

Comments

Popular Posts