கற்க கசடறக் கற்பவை ...,

          கற்க கசடறக் கற்பவை...

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக "
                                  குறள் : 391

கற்க _ கற்றுக் கொள்க
கசடற _பழுதற
கற்பவை _கற்க வேண்டியவை
கற்றபின் _ கற்ற பின்பு
நிற்க _    ஒழுகுக, கடைபிடிக்க
அதற்கு _ கற்றவற்றிற்கு
தக _ தக்கவாறு, பொருந்தும்படி


கற்க வேண்டியவற்றைப் பழுதறக் கற்றல்
வேண்டும்.கற்ற பின்பு கற்ற கல்விக்குத்
தக்கபடி நிலைநிற்றல் வேண்டும்.

விளக்கம் :
   
கற்றல் என்பது எந்தவித குறைபாட்டுடனோ 
தெளிவில்லாத நிலையில் அறைகுறையாகவோ 
இருத்தல் கூடாது. ஐயம் திரிபு அகற்றி
ஆழ்ந்து கற்றல் வேண்டும். 
அப்படி கற்றுவிட்டால் மட்டும் போதாது.
கற்பது எதற்காக?
கற்ற கல்விக்குத் தக்கவாறு நல்ல நெறியில் 
நிற்பதற்காகவே கற்றல் வேண்டும்.
அதாவது கற்றவற்றை வாழ்வில்
நடைமுறைப்படுத்த வேண்டும்.
கல்வி என்பது வெறும் அறிவைப்
பெறுவதற்காக மட்டும் இருத்தல் கூடாது.
பெற்ற கல்விக்கு ஏற்ப ஒழுகுதலே 
கல்வியின் பயனாக இருக்கும்.

 English couplet :

"So learn that you may full and faultless learning  gain
Then in obedience meet to lessons learnt remain "

Explanation :

 Let a man learn thoroughly whatever he may learn and
 let his conduct be worthy of his learning.

Transliteration :

 " KaRka kasadaRak kaRpavai katRapin
   niRka adhaRkuth  thaka "


Comments

Popular Posts