ஞானத்தைத் தேடு

நாள் இரண்டு

                                   ஞானத்தைத் தேடு

     "ஞானத்தை வா என்று கூப்பிட்டு
     புத்தியைச் சத்தமிட்டு அழைத்து
     அதை வெள்ளி போல் நாடி
     புதையல்களைத் தேடுகிறது போல் தேடு"
                                                      நீதிமொழிகள் 2  -(3 ..4)

தேடல் என்பது அதிகாலை முதலே 
அனைத்து உயிரினங்களிடமும் தொடங்கிவிடும்.
பறவைகள் கூட்டைவிட்டு இரை தேட பறக்கின்றன.
பட்டாம்பூச்சி அதிகாலையில் மலரும் 
பூக்களில் மதுவைத் தேடும்.
மனதர்களிடமும் தேடல் பல விதமாக 
நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
புத்தகங்களில் அறிவுக்கான தேடல்
பணத்திற்கான தேடல்...
வேலைக்கான தேடல்..
ஆத்ம அமைதிக்கான தேடல்...
என்று தேடல் பலவிதங்களில்
நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் இளம் பிராயத்தில் நம் தேடல்
அறிவு சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.
அன்பு சார்ந்ததாக இருக்க வேண்டும்.
ஞானத்தை நோக்கிய உங்கள் 
தேடல் தொடங்கிவிட்டால்...
"ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து 
அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாக
 இருக்கும்போது  நல் யோசனை 
 உன்னைக் காப்பாற்றும்.
புத்தி உன்னைப் பாதுகாக்கும்" என்கிறது வேதம்.

நமது தேடல் எப்போதும் 
அறிவு சார்ந்ததாகவே இருக்கட்டும்.
அதை வெள்ளியைத் தேடுவதுபோல தேடு.
புதையலைத் தேடும் மனிதனின்
கண்கள் நாலாப்புறமும் கவனமாகத்
தேடுவதுபோல நமது தேடல் இருக்க
வேண்டும் என்கிறது வேதம்.

நீ தேடுகிற யாவையும் கிடைக்கும்.
நீ...போவதற்கு முன்பாகவே உன்
பாதைகளைச் செவ்வைப்படுத்தப்பட்டிருக்கும்.
நீ நினைப்பதற்கு மேலான நன்மைகள்
காத்துக் கொண்டிருக்கும்.

எல்லாவற்றையும் உனக்கு
சாதகமாக முடித்துக் கொடுப்பார்.
மகிழ்ச்சியாக இன்றைய தேடல் தொடங்கட்டும்.
கர்த்தர் உங்களுடனே வருகிறார்.
அவரே காரியத்தை  வாய்க்கச் செய்வார்.
ஆமென்.


Comments

Popular Posts