ஊழையும் உப்பக்கம் காண்பர்.....

ஊழையும் உப்பக்கம் காண்பர்....


"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் "
                        குறள் :   620

ஊழையும் _ விதியையும்
உப்பக்கம் _ பக்கவாட்டில்,ஒதுக்கித் தள்ளு
காண்பர் _ காண்பார்கள்
உலைவின்றி _ உள்ளத்தில் சோர்வின்றி
தாழாது  _ முயற்சி குறைவு இல்லாமல்,
                    காலம் தாழ்த்தாமல்
உஞற்றுபவர் _ முயற்சி செய்பவர்

மனச்சோர்வின்றி இடைவிடாமல் முயற்சி
செய்பவர் விதியையும் தள்ளி விட்டு
வெற்றி காண்பர்.

விளக்கம் :

 விதி வலிது என்பது அனைவரின்
 அசைக்க முடியாத  கருத்து. 
 இறைவனால் நமக்கு 
 நிர்ணயிக்கப்பட்டது அவ்வளவுதான் 
 என்று பெரும்பாலானோர் நம்பி
 அதற்குமேல் எந்த முயற்சியில்
 ஈடுபடாது விட்டுவிடுவர்.
 இதனை இயற்கையான நிகழ்வு
 என்றுகூட ஒரு சாரார் கூறி கடந்து
 சென்றுவிடுவர்.
 தலையெழுத்தை யாரால் மாற்றமுடியும்?
 எல்லாம் விதிவிட்ட வழி என்று முடங்கிக்
 கிடக்காமல் தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு
 கண்டிப்பாக வெற்றி கிட்டும்.
 விதியையும் புறந்தள்ளி முன்னேற 
 வைக்க வல்லது விடாமுயற்சி.
 ஆதலால் யாரும் விதியைக் காரணம்காட்டி
 முடங்கிக் கிடக்க வேண்டாம்.
 தொடர்ந்து முயற்சி  செய்து 
 கொண்டே இருங்கள்.விதி என்னங்க
 விதி என்று சொல்லி விதியையும்
 விரட்டியடித்து விடலாம் என்கிறார்
 வள்ளுவர்.
 அதாவது ஒரு செயலில் இறங்கிவிட்டால்
 தொடர்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க
 வேண்டும் இடையில் சிறுசிறு சறுக்கல்கள்
 ஏற்படலாம்.  
 அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு
 தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
 வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையைத்
 தருகிறது இந்தக் குறள்.
 
  English couplet :

"Who strive with undismayed , unfaltering mind, at length
Shall leave opposing fate behind "

Explanation:

They who labour on, without fear and without fainting
will see even fate (put ) behind their back.

Transliteration : 

"Pozhiyum uppakkam kaanpar ulaivindrith
Thaazhaadhu ugnarupavar "

Comments

  1. வெற்றிக்குத் திறவுகோல் விடாமுயற்சி என்பதை வள்ளுவர் குறள் வாயிலாக பதிவிட்டது மிகச்சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts