மனிதம் மரணித்ததோ....
மனிதம் மரணித்ததோ.....
வேற்று மனிதராய் மருத்துவர்
எவரும் மருத்துவம் பார்த்ததில்லை
கொரோனா தொற்று மருத்துவரென்று
உம்மையும் விட்டு வைக்கவில்லை
ஆறுதல் சொல்லிட
எம்மிடம் வார்த்தையுமில்லை
மருத்துவமனையில் இடமில்லை
மருத்துவர் எவரும் சொன்னதுமில்லை
மனிதம் மரணித்ததால் மயானத்தில்
மருத்துவருக்கு இடமுமில்லை
தொலைத்துவிட்டோம் மாமனிதரோடு
மனிதத்தையும் என்பதைத் தவிர
வேறெதுவும் இப்போது
சொல்லத் தெரியவில்லை!
Comments
Post a Comment