நீதி சொல்லும் சேதி

                    மூன்றாம் நாள்

                        உதவி செய் 

"நன்மை செய்யும்படி உனக்குத் 
திராணியிருக்கும்போது
அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் 
செய்யாமல் இராதே"
                       நீதிமொழிகள் 3   :  27
  
நானா....நான் என்ன செய்ய முடியும்?
நீ...நீயேதான் உன்னால் செய்யக் கூடியவை 
ஏராளம் உன்னிடம் உள்ளன.
என்னிடம் என்ன இருக்கிறது 
என்று எண்ணாதே .
கர்த்தர் கொடுத்த நல்ல உள்ளம் இருக்கிறது.
அருமையான கால்களும் கைகளும் 
இருக்கின்றன.
இவற்றைத் தவிர வேறு என்ன வேண்டும்?
இவற்றை வைத்து ஏராளமான உதவிகளைத் 
தாராளமாகச் செய்யலாம் .கண்ணில்லாத 
பெரியவருக்கு ரோட்டைக் கடக்க உதவி செய்யலாம்.
நண்பனுக்கு பாடம் சொல்லித்தரலாம்.
பேனா இல்லாத மாணவனுக்குப் பேனா 
கொடுத்து உதவலாம்.
வீட்டில் அம்மா அப்பாவுக்கு உதவலாம்.
 வாட்டர் பாட்டிலில் மீதம் இருக்கும்
 தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றி அவை 
 வளர உதவலாம்.
 பள்ளியிலிருந்து வரும்போது மீதமிருக்கும் 
 ஒற்றை பிஸ்கட்டை தெரு நாய்களுக்குப் 
 போட்டு அவற்றின் பசியாற்றலாம்.
 இதெல்லாம்தான்  உதவியா....
 அப்போ இப்போதே செய்கிறேன் என்று 
 மனம் சொல்லுமே....
 நம்மால் என்ன முடியுமோ அந்த உதவியைச்
 செய்தால் போதும்.
 மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
" ஒன்றே செய் ;நன்றே செய்
 நன்றும் இன்றே செய்"
 நன்மை செய்வதற்கு நாளும் கிழமையும்
 பார்க்கக ்கூடாது.
 
"உன்னிடத்தில் பொருள் இருக்கையில்
உன் அயலானை நோக்கி நீ போய் திரும்ப வா.
நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே"
                                     நீதிமொழிகள் 3  :  28
                
இன்றிலிருந்து தொடங்கட்டும் உங்கள் சேவை.
நீங்கள் செய்யப்போகும் நன்மையால் நாளும்
இரண்டு உயிர்களாவது உங்களை வாழ்த்தட்டும்.
நானா...நானா இத்தனை நன்மைகள் செய்தேன்!
உங்களைப் பார்த்து நீங்களே வியந்து போவீர்கள்.!
உதவி செய்துவிட்டு அடுத்தவர் பாராட்டுவார்கள்
என்று எதிர்பார்க்க வேண்டாம்.
நீங்களே உங்கள் முதுகில் தட்டி சபாஷ் 
சொல்லிக் கொள்ளுங்கள்.
இந்தநாள் நன்மை செய்யும் 
நாளாகவே இருக்கட்டும்.
நன்மைசெய்யும்படியான திராணியைக் 
கொடுத்தமைக்காக நன்றி ஆண்டவரே
என்ற நன்றியறிதலோடு இன்றையநாள் 
தொடங்கட்டும். இன்னும் ஏராளமான கிருபை
யும் வரங்களும் உங்களுக்குக் காத்துக்
கொண்டிருக்கிறது.
ஆமென்.
    

                                       

Comments

Popular Posts