தன்னைத்தான் காக்கின் சினங்காக்க....

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க....


"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம் "
                                           குறள்  :  305

தன்னைத்தான்_ தன்னை
காக்கின்  _  காக்க விரும்பினால்
சினங்காக்க  _  கோபம் வராமல் காத்துக் கொள்க
காவாக்கால் _  காத்துக் கொள்ளாவிட்டால் 
தன்னையே  _ சினம் கொண்டவனையே
கொல்லும் _ அழித்துவிடும்
சினம்  _   கோபம் 

ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்
என்று நினைத்தால் சினம் வராமல் காத்துக் கொள்ள
வேண்டும். அப்படிக் காத்துக் கொள்ளாவிட்டால் அந்தச்
சினமே அவனை அழித்துவிடும்.

விளக்கம் : 

 ஒருவன் தன்னை எல்லா பழி பாவங்களில் இருந்தும்
 காத்துக்கொள்ள விரும்பினால் கோபம் வராமல்
 பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 
 அப்படி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளாவிட்டால்
 அந்தக் கோபம் அவன் வாழ்க்கையை 
 முற்றிலுமாக அழித்துப் போட்டுவிடும்.
 கோபம் தன்னை மட்டுமல்ல தன்னைச்
 சார்ந்தவரையும் அழித்துவிடும்.
 அதனால்தான் சினம் என்னும் சேர்ந்தாரைக்
 கொல்லி என்றார் வள்ளுவர்.
 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.
 அறிவு மழுங்கிப் போய்விடும். தான் என்ன
 செய்கிறோம் என்பதே மறந்து நிலை தடுமாறிப்
 போய்விடுவர்.
 பழிபாவங்களுக்கு அஞ்ச வேண்டும்
 என்ற எண்ணம் மறந்து போவதால்
என்ன வேண்டுமானாலும் செய்வர்.
இப்படிப்பட்ட பழிபாவங்களில் இருந்து
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?
கோபம் வராமல் காத்துக்கொள்க என்கிறார்
வள்ளுவர்.
கோபம் இரத்த அழுத்தம் அதிகமாக காரணமாகிவிடும்.
நரம்புத் தளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
மனநலம் உடல் நலம் இரண்டையும் பாதுகாத்துக்
கொள்ள வேண்டுமா? 
சினம் வராமல் காத்துக் கொள்க.

English couplet : 

"If thou woiuld'st guard thyself, guard against
wrath always, 'Gainst wrath who guard not,
him his wrath shall slay "

Explanation : 

If a man guard himself , let him guard against anger;
If he do not guard it , anger will kill him.

Transliteration :

"Thannaiththaan kaakkin sinangaakka kaavaakkaal
Thannaiye kollunj chinam "


 

Comments

Popular Posts