நீதி சொல்லும் சேதி
நீதி சொல்லும் சேதி
விழித்திரு.
ஏழாம் நாள்
என் போதகத்தை விரல்களில் கட்டி
அவைகளை உன் இருதயப் பலகையில் எழுதிக்கொள்
நீதிமொழிகள் 7 :3
கர்த்தரின் வார்த்தைகள் எப்போதும்
உன்னோடு பேசும்.
நீ நடக்க வேண்டிய வழியைக் காண்பிக்கும்.
எல்லாவித உலகப் பிரகாரமான தீங்குக்கும்
விலக்கிக் காக்கும்.
ஆதலால் தேவ வசனத்தை உன் இருதயமாகிய
பலகையில் எழுதி வைத்துக் கொள்.
ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்
நாளும் ஒரு நீதியை ஒற்றை வாக்கியத்தில்
கையில் எழுதிவர கூறுவாராம்.
மாணவர்களும் தேடிப்பிடித்து கையில்
எழுதி வந்து விடுவராம்.
முன்னால் வந்து ஒவ்வொருவராக தாங்கள்
எழுதி வந்ததை வாசிக்க வேண்டும் .
கொஞ்ச நாளில் அந்த உத்தியை மற்ற
பாடங்களைப் படிப்பதற்கும்
பயன்படுத்தினார்.
நல்ல பலன் கிடைத்தது. எல்லா மாணவர்களும்
நன்றாக எழுதி படிக்க ஆரம்பித்தனர்.
அதே போன்றுதான் வேதமும்.
வேதத்தின் ஒவ்வொரு வசனமும்
நம்மோடு பேசும்.
வேத வசனத்தை நாள்தோறும் படிப்பது
மட்டும் போதாது.அதனை நமது இதயமாகிய
பலகையில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாளின் நன்மையான காரியங்கள
என்ன என்பதை அது நமக்கு போதிக்கும்.
நடக்க வேண்டிய வழிகளைக் காட்டும்.
கர்த்தர் கை காட்டும் வழியில் நடந்தால்
மட்டுமே தீங்குகளிலிருந்து உன்னை
விலக்கிக் காத்துக் கொள்ளமுடியும்.
வேதத்தோடு பேசி முடிவெடுப்போம்.
காரியங்கள் வாய்க்கும்.நீ போ.
நான் உன்னை நடத்துவேன் என்று
கூடவே வரும்.வேத வசனங்களை மட்டும்
கூடவே எடுத்துச் செல். கலங்காதே.
நீயல்ல .தேவனே பேசுவார்.இந்தநாளை
கர்த்தருடைய கரத்தில் கொடுத்துத்
தொடங்குவோம்.
ஆமென்.
Comments
Post a Comment