நீதி சொல்லும் சேதி

                            நீதி சொல்லும் சேதி

ஆறாம் நாள்
                              விழித்திரு

"சோம்பேறியே எறும்பினிடத்தில் போய் 
அதின் வழிகளைப் பார்த்து 
ஞானத்தைக் கற்றுக்கொள்."
                                       நீதிமொழிகள் 6: 6
                                       
எறும்பு அற்பமான பூச்சியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அவை மழைக்காலத்திற்காக 
கோடைகாலத்திலேயே உணவை
சேமித்து வைத்துவிடும்.
மழைக்காலம் வரட்டும் பார்த்துக் 
கொள்ளலாம் என்று சும்மா இருப்பதில்லை.
 தங்கள் உணவை தாங்களே தேடிக் 
 கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும்.
 நான் முந்தி நீ முந்தி என்று 
 முண்டியடித்துக் கொண்டு செல்வதில்லை.
 எல்லாவற்றலும் ஒரு ஒழுங்கைக் கடைபிடிக்கும்.
  நாளைக்கான காரியங்களில் அதிக 
  கவனமாக இருக்கும்.
 சுறுசுறுப்பாக சதா வேலைசெய்து 
கொண்டே இருக்கும்.
சோம்பலாக ஓரிடத்தில் கிடப்பதை
பார்க்க முடியாது.                                    
"இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்
இன்னும் கொஞ்சம் கை முடங்கி 
நித்திரை செய்யட்டும் என்பாயோ 
உன் தரித்திரம் வழிப்போக்கனைப
போலவும்உன் வறுமை ஆயுதம் 
அணிந்தவனைப் போலவும் வரும்"
என்கிறது வேதம்.
தூக்கம் வறுமைக்கு வாசல் திறந்து
விடும்.
சோம்பேறியின் கைகள் கலத்திருந்து
கையெடுக்க மறுக்கும்.
வைகறை துயிலெழு என்பார்கள் .
அதிகாலை நேரம் படிப்பதற்கு உகந்த நேரம்.
அதிகாலை மூன்று மணிக்கே 
எழும்புகிறவர்கள் ஞானி.

" அதிகாலையிலேயே கல்லறையினின்று 
எழுந்ததன் மூலம் காலையில் சீக்கிரமாக 
எழும்ப வேண்டும் என்று ஏசு நமக்கு 
அறிவுறுத்துகிறார் " என்பார் 
ஜோனத்தான் எட்வர்ட்ஸ் என்ற ஊழியக்காரர்.
   
"தூக்கத்தை விரும்பாதே.
விரும்பினால் தரித்திரனாவாய் .
கண்விழித்திரு .
அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தி
ஆவாய் "என்கிறது வேதம்.

Comments

Popular Posts