ஒல்வது அறிவது அறிந்ததன்கண்....

          ஒல்வது அறிவது அறிந்ததன்....

"ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்  "

                                குறள்.   :    472

ஒல்வது  _ இயல்வது
அறிவது _தெரிவது
அறிந்து_ தெரிந்து
அதன்கண் _ அதனிடத்தில்
தங்கி _நின்று
செல்வார்க்கு _செயல்படுபவர்க்கு
செல்லாதது_ முடியாதது
இல் _ இல்லை

ஒருவன் தன் வலிமைக்கு ஏற்றது
எது என அறிந்து அதில் உறுதியாக 
செயல்படும்போது
அவனால் செய்யமுடியாதது் எதுவுமில்லை.

 விளக்கம் :
 
தன் திறம் என்ன என்பதை நன்கு
அறிந்த பின்னரே ஒரு செயலில் ஈடுபட
 வேண்டும். தன்னால் இந்தச் செயலைச்
 செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் திறனும்
 ஏற்பட்டுவிட்டால் போதும். அதன்பின்னர்
 கண்டிப்பாக அச்செயல் நடைபெற்றுவிடும்.
 தன்னால் முடியும் என்ற அதிகப்படியான
 நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது.
 
 எல்லா செயலையும் எல்லோராலும்
 செய்துவிட இயலாது.
 தனக்கு அந்தச் செயலைப் பற்றிய
 முழு அறிவு  இருத்தல் வேண்டும்.
 செய்து முடிக்கும் வலிமை இருத்தல்
 வேண்டும்.
 
 தன் வலிமை தனக்கு மட்டுமே தெரியும்.
 என்னால்  இந்த இந்தச்  செயல்கள்
 மட்டுமே செய்ய இயலும்.இவை எல்லாம் 
 என் திறனுக்கு அப்பாற்பட்டது என்று
 ஒரு பட்டியல் வைத்திருப்போம்.
 
 தன்னால் இயலுவது எது என்பதை அறிந்து
 அதனைச் செய்க. அதுவும் அதன்கண் தங்கிச்
 செல்வார்க்கு என்று கூறி இருப்பதால்
 மனம், மொழி, மெய்களை அவற்றின்மேல்
 வைத்து முழு ஈடுபாடோடு செயல்படுக.
 அப்படி செயல்பட்டால் உங்களால்
 செய்ய முடியாதது என்று எதுவும் 
 இல்லை என்கிறார் வள்ளுவர்.
 
English couplet :

"Who know what can be wrought, with knowledge 
of the means, on this
Their mind firm set , go forth, nought goes 
with them amiss"

Explanation:

There is nothing which may not be accomplished by 
those who attack( an enemy ) make themselves
acquainted with their own ability and with 
whatever else is needful to be known , and
apply  themselves wholly to their object.

Transliteration : 

"olluva tharuvathu arindhahan kaNdhangich
chelvaarkuch chella adhavdhu il"
 
 
 
 

Comments

Popular Posts