கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்....

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்....


"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் "
                                            குறள்  :  166

கொடுப்பது _ பிறருக்குக் கொடுப்பது
அழுக்கறுப்பான் _  பொறாமைப்படுகிறவன்
சுற்றம்.  _  குடும்பத்தார், கிளைஞர்
உடுப்பதூஉம் _ உடுக்க உடை
உண்பதூஉம்  _ உண்ண உணவு
இன்றி  _  இல்லாமல்
கெடும் _ துன்பப்படும்,அழியும்

பிறருக்கு உதவியாகக் கொடுக்கப்படும்
பொருளைக் கண்டு பொறாமைப்படுகிறவனுடைய
சுற்றம் உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

விளக்கம் :

இல்லாதவன் இருப்பவனுக்குக் கொடுக்கிறான்.
அதைப் பார்த்துஉனக்கேன் பொறாமை?
அடுத்தவன் கொடுத்து இவன் வாழ்ந்துவிடக்
கூடாதே என்ற காழ்ப்புணர்ச்சி.

இது பொறாமையிலும் கொடும் பொறாமை.
நீ உதவவில்லையா? சும்மா இரு.
அடுத்தவன் கொடுப்பதையும் தடுக்காதே.
அப்படி தடுக்க நினைத்தால்...
உனக்கு கேட்டினும் பெரும் கேடு
வந்து சேரும்.
அதென்ன கேட்டினும் பெரும் கேடு?
வாழ்வின் அடிப்படைத் தேவையான 
உண்ண உணவும் உடுக்க உடையும்
இல்லாமல் உன் சுற்றமே அழிவை
சந்திக்க நேரிடும் என்று  எச்சரிக்கை விடுகிறார்
வள்ளுவர்.
கொடுக்க நினைக்கிறவன் கையைத்
தடுக்க நினைக்கிறவன் அழிவான்
என்று வள்ளுவர் கூறவில்லை.
அவன் சுற்றமே அழியும் என்கிறார்.
அவன் செய்த தீது அவனுக்குத்தானே
வந்து சேர வேண்டும்.
அதுதானே ஞாயம் என்று கேட்கத்
தோன்றும்.
 நல்வினை குடும்பத்தைச்
சாரும்போது தீவினையும் குடும்பத்தாருக்குக்
கிடைப்பதுதானே ஞாயம்.
அந்தவகையில் கொடுப்பதைத் தடுப்பவன்
குடும்பமும் உணவும் உடையும்
இல்லாமல் அழியும் என்பது குறள்
கூறும் கருத்தாகும்.

English couplet : 

"Who scans good gifts to others given with envious eye,
His kin,
with none to clothe or feed them surely die "

Explanation. : 

"He who is envious at a gift (made to another )will with his 
realations utterly perish destitute of food and rainment"

Transliteration :

"koduppadhu Azhukkaruppaan sutram Utuppadhoom
Unpadhooum indrik ketum "










Comments