உரமொருவற்கு உள்ள வெறுக்கை....

உரமொருவற்கு உள்ள வெறுக்கை...


"உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
 மரம்மக்க ளாதலே வேறு "
                                குறள்.   :   600

உரம் ,_ வலிமை, அறிவாற்றல்
ஒருவற்கு  _ ஒருவனுக்கு 
உள்ள  _  ஊக்கம்
வெறுக்கை  _  மிகுதி
அஃது  _ அது
இல்லார்  _ இல்லாதவர்
மக்கள்  _  மாந்தர்
ஆதலே  _ ஆகுதலே 
வேறு _ வேறுபட்டது ,பிறது

ஒருவனுக்கு வலிமையாவது ஊக்கம்
மிகுதியே ஆகும்.ஊக்கம் இல்லாதவர்கள் 
பார்ப்பதற்கு மனிதர்கள் போல
காணப்பட்டாலும் உண்மையில் மரத்திற்கு
ஒப்பானவரே ஆவர்.

விளக்கம் :

ஒருவனுக்குப் பலம் என்பது ஊக்க மிகுதியே
ஆகும்.
அந்த ஊக்கம் இல்லாதவர் மக்களாகவே
கருதப்படமாட்டார்.

மக்களாக இருத்தல் என்பது வேறு .
மக்கள் என்று சொல்லப்படுபவர்
மனத்தால் இயங்குபவர்.
வெறும் காலால் இயங்குபவர் மனிதர் அல்லர்.

மரங்களுக்கும் உயிர் உண்டு.
ஆனால் இயக்கம் இல்லை.
அதைபோன்று எந்தவித இயக்கமும் இன்றி
அசையாது சோம்பேறியாக எதுவும்
செய்யாமல் இருப்பவரை மரம் என்று
கூறாமல் வேறு என் சொல்வது என்று
நினைப்போம்.ஆனால் இங்கு வள்ளுவர்
வெறுமனே மரம் என்று சொல்லிவிடவில்லை.

மனதில் ஊக்கமில்லாதவர் மரதினும் வேறு
என்கிறார் வள்ளுவர்.
அதாவது மரம் எந்தவிதத்திலாவது
பிறருக்குப் பயன்படும்.
உணவாகப் பயன்படும்.
பட்டுப்போன பின்னர் விறகாகவேனும்
பயன்படும்.
ஊக்கமில்லாதவனால் எந்தவித பயனும்
இல்லை. எதற்குமே பயன்படாதவன்
என்பதாலேயே மரமக்களாதலே வேறு
என்கிறார் வள்ளுவர்.

ஒருவனுக்கு திண்ணிய அறிவு என்பது
ஊக்கமிகுதியே ஆகும்.

English couplet :

"Firmness of soul in man is real excellence;
Others are trees their human form a mere pretence."

Explanation. :

Energy is mental wealth ; those men who are destitute
of it are only trees in the form of men .

Transliteration :

"Uramoruvarku  ulla verukkaiaq thillaar
Maramakka Laadhale veru"
    

Comments

Popular Posts