ஒருமைக்கண் தான் கற்ற கல்வி....

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி...."ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து "

      

ஒருமைக்கண் _ ஒரு பிறப்பில்
தான் கற்ற _ கற்றுத் தேர்ந்த
கல்வி _ அறிவு
ஒருவற்கு _ ஒருவருக்கு
எழுமையும் _ பல காலம்
ஏமாப்பு _  பாதுகாப்பு
உடைத்து _ உடையது

ஒரு பிறப்பில் ஒருவன் கற்றக் கல்வியானது
இந்தப் பிறவியில் மட்டும் அல்லாது ஏழேழு
தலைமுறை வரையிலும் பாதுகாப்பாக 

இருந்து உதவும்.

விளக்கம் :

ஒரு முறை படித்துவிட்டால் போதும்.
அது என்றென்றும் நம்
கூடவே வரும்.  இந்த உலகில் அழிவில்லாத
ஒன்று உண்டென்றால் அது கல்வி
மட்டுமாகத்தான் இருக்கும்.
ஒருமனப்பட்டு இந்தப் பிறவியில் கல்வியைப்
பெற்றுக் கொண்டால் போதும். அது இன்னும்
ஏழேழு பிறவிகளுக்கும் அரணாக இருந்து
நம்மை பாதுகாக்கும்.
ஏழேழு பிறவிகள் என்பது தொடர்ந்து நாம்
வாழும் காலம் என்பதாகவே எடுத்துக்
கொள்ள வேண்டும்.
ஒருமை என்பதை ஒரு பிறப்பு என்று
சொன்னவர்கள் எழுமையை ஏழு பிறப்புகள்
என்றனர்.
ஒரு தலைமுறையில் நாம் கல்வி அறிவு
பெற்றுவிட்டால் அது ஏழு தலைமுறைக்கும்
பாதுகாப்பாக அமையும்.ஆதலால் நாமும்
நம் தலைமுறையும் பாதுகாப்பாக இருக்க
வேண்டுமானால் கல்வி கற்றுக் கொள்ளுங்கள்
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"   The man who store of learning gains, in one
   through seven worlds bliss attains"
  
Explanation :

The learning which a man has acquired in one
birth ,will yield him pleasure during seven births.

Transliteration:

"OrumaikkaN thaan katra kalvi oruvarku
Ezhumaiyum Emaap putaiththu "

   

Comments

Popular Posts