நீதி சொல்லும் சேதி

                   நீதி சொல்லும் சேதி 

                          ஐந்தாம் நாள்.

           உனக்குள்ளவற்றில் திருப்தியாய் இரு
            
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும்
உன் துரவில் ஊறுகிற ஐலத்தையும் 
பானம் பண்ணு. அவைகள் அந்நியருக்கும்
உரியவைகளாயிராமல் உனக்கே 
உரியவைகளாயிருப்பதாக.
                                                        நீதிமொழிகள்: 5:15 :17
 
பார்க்கிற யாவும் பகட்டாக தெரியும்.
 என்னை உனக்குரியதாக்கிக் கொள் என்று 
 கெஞ்சுவது போல் இருக்கும்.
 ஆனால் உன் கண்கள் உண்டாக்கும் 
 இடறல்களுக்கு உன்னை நீங்கிக் காத்துக் கொள்.
 உன் நண்பன் அழகான பேனா வைத்திருக்கிறான்.
உனக்கும் அப்படி ஒரு பேனா வாங்க 
வேண்டும் என்றுஆசை.
எத்தனையோமுறை அப்பாவிடம் 
கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை.
நண்பனுக்குத் தெரியாமல் எடுத்துவிடலாமா...
தூக்கு...தூக்கு என்கிறது மனது.
தூக்காதே...தவறு என்கிறது மனசாட்சி.
இப்படி மனதிற்குள் ஒரு தாவா நடக்கிறது.
பிறனுடைய பொருள் மீது ஆசைப்படாதே 
என்கிறது வேதம்.
அதை ஒருபோதும் உன்னுடையது
 ஆக்கிக் கொள்ள நினையாதே.
உனக்கென்று கொடுக்கப்பட்டவற்றில்
 திருப்தியாக இருக்க பழகு.
ஒருமுறைதானே  யார் பார்க்கப் போகிறார்கள் 
என்று துன்மார்க்க செயலில் ஈடுபட்டுவிட்டால் 
அது காலம் முழுக்க நம்மைக் களங்கப்படுத்திவிடும்.
 பிறருடைய பொருள் எதுவும் ஒருபோதும் 
 நம்முடையது ஆகாது.
 கொஞ்சத்தின்மேல் உண்மை உள்ளவனாய் இரு.
அநேகத்தின்மேல் அதிகாரியாய் வைக்க தேவன் 
காத்திருக்கிறார்.
உண்மை உயர்வைத்தரும்.
கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு எல்லா
 காவலோடும் உன்னைக் காத்துக்கொள்.
 நீ வயல் ஓரங்களில் நடப்பட்ட திராட்ஷை 
 கனி போல இருப்பாய்.
 இந்தநாளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க 
 எல்லாவற்றிலும் உண்மை உள்ளவர்களாக 
 இருக்க வேண்டும்.
   

Comments

Popular Posts