கலங்காது கண்ட வினைக்கண்....
கலங்காது கண்ட வினைக்கண்....
"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல் "
குறள் : 668
கலங்காது _ கலக்கமடையாது
கண்ட வினைக்கண் _செய்யத்துணிந்த செயலில்
துளங்காது _ சோம்பலின்றி
தூக்கம் _ உறக்கம், காலம் தாழ்த்தாமல்
கடிந்து _ மறந்து, ஒழிந்து
செயல் _ செய்க
ஒரு செயலைச் செய்யத் துணிந்துவிட்டால்
மனம் கலக்கம் அடையாமல் பின்னோக்கிப்
பார்த்து சோர்வடையாமல் உறக்கத்தை
மறந்து செயல்பட வேண்டும்.
விளக்கம் :
செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட
செயலின்கண் தளர்ச்சியின்றி காலம்
தாழ்த்தாமல் உடனே செய்து முடிக்க
வேண்டும்.
சோர்வின்றி ஊண் உறக்கமின்றி
செயலில் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி
காண முடியும். இடையில் எந்த கலக்கமும்
வந்து மனம் குழப்பமடைய இடம் கொடுத்துவிடக்
கூடாது.
ஒரு செயலைத் தேர்ந்தெடுப்பதிலும் தெளிவு
வேண்டும். தேர்ந்தெடுத்த பின்னர் பின்னோக்கித்
திரும்பிப் பார்த்துவிடக் கூடாது.
முன் வைத்த காலை பின் வைத்துவிடக் கூடாது.
சோர்வடைந்து இடையில் நின்றுவிடக் கூடாது.
தூங்காமல் கண்விழிப்போடு செயலாற்றுதல்
வேண்டும்.அப்போதுதான் என்ன நோக்கத்திற்காக
அந்தச் செயலில் ஈடுபட்டோமோ அந்த நோக்கம்
நடைபெறும்.
கலங்காது எடுத்துக் கொண்ட வினையைக்
காலம் தாழ்த்தாது செய்து முடிக்க வேண்டும்
என்கிறார் வள்ளுவர்.
English couplet :
"What clearly eye discerns as right , with steadfast will
And mind unslumbering that should man fulfill."
Explanation :
"An act that has been firmly resolved on must be
as firmly carried out without delay "
Transliteration :
"Kalangaadhu kaNda vinaikkaN thuLangaadhu
thookkanG katindhu seyal "
Comments
Post a Comment