நீதி சொல்லும் சேதி

                         நீதி சொல்லும் சேதி

                               நான்காம் நாள்

                    இடறலுக்கு விலக்கிக் காப்பார்
                        
" நீ அவைகளில் நடக்கும்போது உன்
நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை.
நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்"
                                                                    நீதிமொழிகள் 4:12
    

நாம் போகின்ற பாதையில் பல
இடையூறுகள் ஏற்படும்.
அதற்காக நாம் முடங்கிக் கிடந்துவிட
முடியாது.
நடு ரோட்டில் ஒரு கல் கிடக்கின்றது.
அனைவரும் கல்லை சுற்றி செல்கின்றனர்.
திடகாத்திரமானவர்கள் கல்லைத்
தாண்டிசெல்கின்றனர்.ஆனால் யாருக்குமே
அதைத் தூக்கி ஓரமாக போட வேண்டும்
என்ற எண்ணம்வரவில்லை.
அப்போது அந்த வழியாக ஒரு
  கண்தெரியாத மனிதர் வருகிறார்.
அதைப் பார்த்த வாலிபன் ஒருவன்
ஓடி வந்து அந்த மனிதரின் கையைப்பிடித்து
கல்லில் இடராதபடி பார்த்து கடத்தி விடுகிறான்.
கல்லை எடுத்து அப்புறப்படுத்துகிறான்.
கீழே விழ இருந்த அந்தக் கண் தெரியாத
மனிதன் காப்பாற்றப்படுகிறான் .
அந்த வாலிபனுக்கு அந்த கல்லை
எடுத்து அப்புறப்படுத்தவேண்டும் என்ற
எண்ணம் எதனால் வந்தது?
அவன் தன் தகப்பனிடமிருந்து பெற்ற
புத்தியினால் வந்தது.
கால்கள் இடறுவது எதனால் என்பதை
அவன் அறிந்திருந்தான்.
அதே போன்றுதான் நமது கால்களையும்
தேவன்காப்பார்.
உன் பாதம் கல்லில்  இடறாதபடிக்குக்
காத்துக் கொள்வேன் என்ற தேவன்
வாக்கு மாறாதவர்.
எல்லா தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.
வலதுபுறமாவது இடது புறமாவது சாயாமல்
நேர்வழியிலே உன் நடை இருக்கட்டும்.
நீ போவதற்கு முன்பாகவே உன்
பாதை செவ்வைப்படுத்தப் பட்டிருக்கும்.
நானல்ல.நீரே காரியத்தை வாய்க்கப்
பண்ணுகிறவர் என்று அவரிடத்தில்
நம்மை ஒப்புக்கொடுத்து இந்தநாளைத்
தொடங்குவோம்.
நீ போக்கிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.வரத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
இந்த வாக்குத்தத்தம் இன்று நிறைவேறும்.
நம்பிக்கையோடு இந்தநாளின்
அடிகளை எடுத்து வைப்போம்
எல்லா காரி்யங்களும் வாய்க்கும்.
  ஆமென்.
 
          

Comments

Popular Posts