தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்....

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்....
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து "
                                      குறள் :  828

தொழுத -       கும்பிட்ட
கையுள்ளும் _ கையினுள்ளும்
படை _  கொலைக்கருவி , ஆயுதம்
ஒடுங்கும் _மறைந்திருக்கும்
ஒன்னார் _  பகைவர்
அழுத _  புலம்பிய ,
கண்ணீரும்  _ கண்களினின்று உகுக்கும் நீரும்
அனைத்து _ அவ்வளவினதே , அது போன்றதே


கைகூப்பித் தொழும்போதும் பகைவர் கைக்குள்
ஆயுதம் மறைந்திருக்கலாம்.
அதுபோல பகைவர் அழுது 
கண்ணீர் சிந்தினாலும் அவர்கள் மனதில்
கெடு சிந்தையே நிறைந்திருக்கும்.

விளக்கம் :
பகைவர் எப்போதும் பகைவர்தான்.
ஒருபோதும் நமக்கு நல்லது செய்ய வேண்டும்
என்ற எண்ணம் பகைவர் உள்ளத்தில்
இருக்காது.
பகைவர் கும்பிடு போட்டால்கூட கைக்குள்
கொலைக்கருவியை மறைத்து 
வைத்திருக்கலாம். ஆதலால் பகைவரிடம்
எப்போதும் கவனமாக இருக்கவேண்டும்.
நமக்காக கண்ணீர் சிந்துகிறார்களே என்று
நம்பிவிடக்கூடாது.
அது முதலைக் கண்ணீராகக் கூட
இருக்கலாம்.

தொழுவதும் அழுவதும் தன் வஞ்சகம்
வெளியில் தெரியாமல் இருப்பதற்காக
பகைவர் நடத்தும் நாடகம்.
பகையையும் வஞ்சகத்தையும்
நெஞ்சில் வைத்துக் கொண்டு
நட்புறவாடுவர். ஆனால் சரியான
சந்தர்ப்பம் வாய்த்தால் கொலை செய்யவும்
அஞ்சமாட்டார்கள்.
புறத்தில் நட்பு பாராட்டி மனத்தளவில்
நெருக்கம் இல்லாமல் போலியான நட்பு
கொண்டு நெருங்கிப் பழகும்
பகைவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பகைவர் தொழுதாலும் நம்பாதே.
அழுதாலும் நம்பாதே.
பகைவன் ஒருபோதும் நண்பனாக
மாறப்போவதில்லை.

English couplet. :

"In hands that worship weapon ten hidden lies;such are the
tears that fall from foeman's eyes "

Explanation : 

"A weapon may be hid in the very hands with which (one's)
foes adore (him and ) the tears they shed are of
the same nature"


Transliteration: 

"Thozhudhakai yullum pataiyotungum oonaar
Azhudhakan neerum anaithu "
Comments

  1. இந்தக்குறள் என்ன அணி?

    ReplyDelete

Post a Comment

Popular Posts