ஔவையின்ஆத்திசூடி ( உயிர்மெய்)

                        ஔவையின் ஆத்திசூடி ( உயிர்மெய் வருக்கம் )


ஆத்திசூடியில் இரண்டாவது வருவது உயிர்மெய் வருக்கப் பாடல்கள்.

இதில் பதினெட்டு பாடல்கள் உள்ளன. அவற்றைக் காண்போம்.

     1. கண்டொன்று சொல்லேல்.
    
விளக்கம் :  கண்ணால் கண்டதற்கு மாறாக பொய்சாட்சி சொல்லாதே .
    
       Translation:  Don't exaggerate what you saw.
      
2. ஙப்போல் வளை.
 
      விளக்கம் :      ங என்னும் எழுத்தானது  எப்படி தன்னையும் பாதுகாத்து தன் வருக்க எழுத்துகளையும் சேர்த்து வைத்துக் கொள்ளுகிறதோ அதுபோன்று தன் சுற்றத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

           ங என்ற எழுத்து எப்படி பணிந்து வணங்குதல் போல காணப்படுகிறதோ அவ்வாறு பெரியோரைப் பணிந்து வணங்குதல் வேண்டும்.
          
Translation : Bend to befriend.

3   சனி நீராடு.

    விளக்கம் :   சனிக்கிழமை குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
   
   Translation :. Shower regularly.
  
4   ஞயம்பட உரை.

விளக்கம் :      கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு.

     Translation :     Sweeten your speech.
        
5.   இடம்பட வீடு எடேல்.

      
விளக்கம்:      உன் தேவைக்கு அதிகமாக மிகப்பெரிய அளவில் வீட்டைக் கட்டாதே.

     Translation :   Judiciously space your home.
      
6.    இணக்கம் அறிந்து இணங்கு.

      விளக்கம் : ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்னர் அவர் நற்குணங்கள் மற்றும்  நற்செய்கைகள் உடையவரா என அறிந்து அதன் பின்னர் நட்பு கொள்ள வேண்டும்.

       Translation :   Befriend the best.
        
7.   தந்தை தாய்ப் பேண்.

விளக்கம் :     உன்னுடைய தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம்வரை கூடவே வைத்து பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

     Translation :     Protect your parents.
       
8.   நன்றி மறவேல்.

      விளக்கம்: ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒருபோதும் மறவாதே.

     Translation :    Don't forget gratitude.
        
9   பருவத்தே பயிர் செய்.

    விளக்கம் :   எச்செயல் செய்தாலும் அதற்குரிய காலத்தில் செய்தல் வேண்டும்.

        Translation :    Husbandry has its season.
          
10.  மண் பறித்துஉண்ணேல்.

       விளக்கம்:   பிறர் நிலத்தை அபகரித்து அதன்மூலம் வாழாதே.
      
           Translation: Don't land grab.
          
11.இயல்பு அலாதன செய்யேல்.

  விளக்கம் :      நல்லொழுக்கத்திற்கு மாறான எந்த செயலையும் ஒருபோதும் செய்தல் கூடாது.
 
      Translation  : Desist demeaning deeds.
     
12.   அரவம் ஆட்டேல்.

    விளக்கம்:   பாம்புகளோடு ஒருபோதும் விளையாடாதே.
      
         Translation :  Don't play with snakes.
        
13.  இலவம் பஞ்சில் துயில் .

    விளக்கம் : இலவம் பஞ்சு படுக்கையில் உறங்கு.
    
Translation :      Cotton bed better for comfort.
    
14.  வஞ்சகம் பேசேல்.

      விளக்கம் :  கபடமாக உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே.
     
Translation :      Don't wile.
     
15.  அழகு அலாதன செய்யேல்.

      விளக்கம்:     இழிவான அதாவது தரக்குறைவான செயல்களை ஒருபோதும் செய்தல் கூடாது.
     
      Translation : Detest the disorderly.
     
16. இளமையில் கல்.

விளக்கம்:     இளமைப் பருவத்தில் இருந்தே கற்க வேண்டிய நல்ல நூல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
    
Translation:         Learn when you are young.
       
17. அறனை மறவேல்.

    விளக்கம் :  அறச்செயல்கள் செய்ய ஒருபோதும் மறத்தல் கூடாது.
 
Translation :       Cherish charity.
      
18.   அனந்தல் ஆடேல்.

        விளக்கம்:  எப்போதும் தூங்கிக் கொண்டு இருத்தல் கூடாது.
      
Translation :     Over sleeping is obnoxious.

       

           

       

Comments

Popular Posts