அஃகம் சுருக்கேல்


          அஃகம் சுருக்கேல்


     " அஃகம் சுருக்கேல்."
       இதைப் பற்றி பள்ளியில் படித்தபோது 
பொருளே தெரியாது.
கூட்டத்தோடு கத்தல்.
அப்படியே மனதில் பதிந்துவிடும்.

  அஃகம் சுருக்கேல் என்றால் என்ன அக்கா என்று 
   ஆசிரியரிடம் கேட்கும் துணிச்சல்
 இல்லை.
எனக்கு மட்டுமல்ல உங்களில் பலரின் நிலையும்
என்னைப் போல்தான் இருந்திருக்கும்.
அப்படியே துணிச்சலோடு கேள்வி கேட்டிருந்தாலும்
 அஃகம் சுருக்கேல்  என்றால் அஃகம் 
சுருக்கேல்தான்....சும்மா உட்காரு...
என்ற அதட்டல் கூட கிடைத்திருக்கலாம்.
  எந்த ஆத்திசூடிக்குமேஆசிரியர்  பொருள் சொல்லித் தந்ததாக நினைவில்லை.
 ஆனாலும் அனைத்தும் இன்றுவரை மனப்பாடம்.
அப்படி ஒரு பயிற்சி.
 வாய்பாடு போல அனைத்து மனப்பாட 
செய்யுளையும் ஒருவர் மாற்றி ஒருவர் 
முன்னால் நின்று நாள்தோறும் சொல்ல வேண்டும்.
  பின்னர் மனப்பாடம் ஆகாமல் இருக்குமா என்ன....   இன்றுவரை உயிர் வருக்க ஆத்திசூடி
  அனைத்தும் அத்துப்படி.
  ஆனால் பொருளில்தான் அங்கங்கே சிக்கல்.
  இப்போது அஃகம் சுருக்கேல் பற்றி அறிவோம்.
  அஃகம் என்றால் தானியம்.
  சுருக்கேல் என்றால் குறைக்காதே.
  அதாவது தானியத்தைக் குறைவாக
 அளந்து கொடுக்காதே  என்பது பொருள்.

  பலசரக்கு கடைக்குப் போனால் தானியத்தை  அளக்க 
   தனித்தனி எடைக்கற்கள் வைத்திருப்பார்களாம்.
   பலசரக்கு கடைகளில் மட்டும் அல்ல...
  விவசாய விளைநிலங்களில் கூட கூலி கொடுக்கும்போது
   குறைத்து அளந்து கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.
    அப்போதெல்லாம் அஃகம் சுருக்கேல் என்று
 ஔவை கூறியதின் பொருள் தெரியவில்லை.
  மாடு மேய்க்கிற பையனுக்கு ஆறு மாதத்திற்கு கூலி
   இரண்டு கோட்டை சோளம்.
   ஒரு கோட்டை என்பது இருபத்து ஒரு மரக்கால்.
   ஒரு மரக்கால் என்பது நான்கு பக்கா.
   இப்படி கூலியாக கொடுக்கப்படும் தானியத்தை 
அளக்கும் போது அதில் எப்படி கொஞ்சம்
குறைக்கலாம்...மனம் கணக்குப் போடும்.

  அதுபோல கதிரடிக்கும் தொழிலாளிகள் ,கதிர் அறுக்கும்
 தொழிலாளிகள் என்று அனைவருக்குமான கூலி
  தானியமாகத்தான் கொடுக்கப்படும்.
  அப்படி கொடுக்கப்படும்போது அளவில்
 குறை வைக்காதீங்கப்பா...ஃ
  அமுக்கி குலுக்கி அளந்து கொடுங்கள் 
என்கிறார் ஔவை.
மொத்தத்தில் அஃகம் சுருக்கேல் என்றால்
 கள்ளத் தராசு  வைத்துக்கொள்ளாதீர்
 என்பதுதான் இருத்து...

அஃகம் என்றால் தானியமா...
ஆச்சரியமாக இருக்கிறதா....
இத்தனைநாள் இது தெரியாமல் இருந்திருக்கிறோமே...
தெரிந்து விட்டதல்லவா...
இனி குறைவாக அளந்து கொடுக்காதீர்கள்.
ஔவை மகிழ்ச்சியாகிவிடுவார்..ஔவை என்ன வாங்குகிறவருக்கும் மகிழ்ச்சிதானே!
            
               
               
       
              
              
         
         
   

          

Comments

Popular Posts