அவள் அப்படித்தான்

                   அவள் அப்படித்தான்


   காபி் குடித்துக் கொண்டிருந்த மாதவன் சமையல் அறையில்  இருந்து சப்தம் வந்ததும் அரைகுறையாக குடித்தகாபிப    டம்ளரை சப்தம்வரும்படி டீபாய்மேல் ஓங்கி வைத்தார்.
         
       " அங்கே என்ன சப்தம்... "டம்ளரின் ஒலிக்கு மறுஒலி
         சமையலறையில் இருந்து வந்தது.
        
        இதற்குபோய் ஏதாவது பதில் சொல்ல காலையிலேயே
         ஏடாகூடாவாகிவிடக்கூடாது என்று இடத்தை காலி
        செய்துவிட்டு வராண்டாவில் போய் அமர்ந்தார் மாதவன்.
       
        இது இன்று நேற்று நடக்கும் விசயமல்ல.பதினைந்து
        வருடமாக  இந்த வீட்டில் காலைக்காட்சி இதுதான்.
        காலையில் எப்போது சமையலறைக்குள் வான்மதி நுழைவாளோ
மறுநிமிடமே பாத்திர பண்டங்கள் எல்லாம் நடுக்கம் கண்டுவிடும்.
        
         ஆரம்பத்தில்" ஏன் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாய்"
          என்று கேட்டுப்பார்த்தார் மாதவன்.
        " .ரிலாக்ஸ் ....ரிலாக்ஸ். ..." என்று ஏதாவது கூறி சமாதானப்படுத்திப் பார்ப்பார்.
        அதுவே சில நேரங்களில் பிரச்சனையாகிவிடுவது உண்டு.
        ஒன்றுமில்லாத காரியத்திற்கு எல்லாம் காட்டு கத்தல் கத்துவாள்.
       
        எல்லாம் ஒருமணி நேரம்தான்.பிள்ளைகளைப் பள்ளிக்கு
         அனுப்பும்வரைதான் இந்த கடுகடுப்பும் சிடுசிடுப்பும்.
        எல்லா வேலையையும் தான் ஒருத்தி மட்டுமே செய்வதாக
         புலம்புவாள்.
        
        கூடமாட ஒத்தாசை செய்யலாம் என்று கிச்சன் பக்கம்சென்றால்ல  சிடுசிடுப்பு  அதிகமாகிவிடும்.
        அந்த நேரத்தில் பிள்ளைகள் அது இல்லை...இது
         இல்லை ஏதாவது என்று சொல்லிவிட்டால் போதும் கோபம்  உச்சந்தலையில் ஏற ...இடையில் கையில் கிடைத்ததை வைத்து  பதம் பார்த்துவிடுவார்.
       இன்று தொடங்கும்போதே கூடவே கத்தலும் ஓங்கி வந்து
        விழுந்தது.
       
          காலையிலேயே மாதவனின் நண்பர்  சாதாசிவம் வந்திருந்தார்.
           கூடுதலாக  ஒரு கப் காபி கொண்டு வர சொன்னதுதான்
           குற்றமாகி விட்டது.
          காபி டம்ளரை கொண்டு வைத்ததிலிருந்து தொடங்கிய இடி   முழக்கம் இன்னும் நின்றபாடில்லை.
          "அம்மா போயிட்டு வர்றேன்..".குழந்தைகள் இருவரும்
          வாசலுக்கு வந்தனர்.
         
         " அப்பா போயிட்டு வர்றேன்...."பத்திரிகையில் இருந்து கண்களை  எடுக்காமலே 'உம் 'என்றார்.
          
           "அங்கே என்ன சொல்ல வேண்டியது கிடக்கு....வேன்
            வந்துட்டு...   ஓடுங்க...ஓடுங்க..."
            கூடவே தானும் ஓடிப்போய் வேனுக்குள்
            பிள்ளைகளைத் தள்ளிவிட்டார்.
           
         "  பார்த்து...பத்திரம்...."கையை அசைத்துவிட்டு திரும்பினார்.
            முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி வீட்டுக்குள் சென்றார்.
             இது எதையுமே கண்டு கொள்ளாமல் நாழிதழில் முகம்
           புதைத்தவர் போல் அமர்ந்திருந்தார் மாதவன்.
          
           சற்று நேரத்தில்  "என்னங்க ....இங்க வாங்க ..".என்ற வான்மதி
           குரல் அமைதியாக அழைப்புச் செய்தியை சுமந்து வந்தது.
          
             நாழிதழை மடக்கி வைத்தபடி எழும்பிய மாதவன்" அவள்
             அப்படித்தான் "தனக்குள்ளே சொல்லி சிரித்துக் கொண்டார்.
            
       
          
       
         

Comments

Popular Posts