ஔவையின் ஆத்திசூடி ( தகர வருக்கம் )

                            ஔவையின் ஆத்தி சூடி
                               ( தகர வருக்கம் )

1.   "தக்கோன் எனத் திரி."
     
        நற்பண்பு மிக்கவன் என்று சொல்லும்படியாக நடந்துகொள்.
     
        Be trustworthy.
    
     2. "  தானமது விரும்பு."
    
       யாசகம் கேட்டு வருபவர்களுக்கு விருப்பத்தோடு கொடு.
     
     . Be kind to the unfortunate .
     
     3.  "திருமாலுக்கு அடிமை செய்."
   
     படைத்த இறைவனுக்கு தொண்டு செய்து வாழ்வாயாக.
     
    . Serve the protector.
   
    
     4. "  தீவினை அகற்று ."
    
     தீமைதரும் எந்த செயலையும் ஒருபோதும் செய்தல் கூடாது.
    
      Don't sin.
     
     5."  துன்பத்திற்கு இடம் கொடேல்."
    
             முயற்சி செய்யும்போது இடையிடையே ஏற்படும் சோர்வுக்கு அஞ்சி அதனை விட்டு விலகாதே.
             
     . Don't attract suffering.
     
     6. " தூக்கி வினை செய்."
    
   . ஒரு செயலைத் தொடங்குமுன் அதைப்பற்றி நன்கு ஆராய்ந்துஅதன் பின்னர் செயலைச் செய்ய வேண்டும்.
     
    . Deliberate every action .
     
     7. "தெய்வம் இகழேல்."
     
      ஒருபோதும் கடவுளை இழிவாக பேசாதே.
     
     . Don't  defame the devine.
      
     8." தேசத்தோடு  ஒட்டி வாழ் "
    
     உன்னோடு வாழும் நாட்டு மக்களோடு பகைமை அகற்றி நட்பாக வாழ வேண்டும்.
     
     . Live in unison with your countrymen.
     
     9." தையல் சொல் கேளேல். "
     
     மைனைவி சொல் கேட்டு ஆராயாமல் எந்த செயலிலும் ஈடுபடாதே.
     
     . Don't listen to the designing.
    
     
     10. "தொன்மை மறவேல்."

      பழைமை என்று நினைத்து நம் கலாச்சாரத்தை விட்டு விலகி விடாதே.
    
     Don't forget to your fast glory.
     
     
     11." தோற்பன தொடரேல்."
    
     ஒரு செயலைச் செய்தால் அது தோல்வியில்தான் முடியும் என தெரிந்துவிட்டால் அந்தச் செயலை ஒருபோதும் தொடர்ந்து செய்துகொண்டிருக்காதே.
     
     Don't compete if sure of defeat.

Comments

Popular Posts