வினைத்தொகை

     
                                வினைத்தொகை

       காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.
        கரந்த என்பது மறைந்து வருவது.

          வினைத்தொகை என்பது ஒரு வினைச்சொல்லும் ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல்லாகும்.
          இதில் முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும்.
          இரண்டாவது வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
          முதலாவது வரும் வினைச் சொல்லானது மூன்று காலத்தையும்
          குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும்.

                  பெயரெச்சத்தின் விகுதியும் காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு வினையின் முதல்நிலை மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வது வினைத்தொகை.

       எடுத்துக்காட்டு : 
                    ஊறுகாய்

       இச்சொல் ஊறுகின்ற காய் , ஊறின காய் , ஊறும் காய்
       என முக்கால வினைகளையும் குறிக்கும்.
            இறந்தகாலம்  , நிகழ்காலம்  , எதிர்காலம்  ஆகிய மூன்று காலங்களும் இரு சொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் அவை
    வினைத்தொகையாகும்.
                       " சுடுசோறு "

         சுடுகின்ற சோறு  _  நிகழ்காலம்
           சுட்ட சோறு    _    இறந்தகாலம்
            சுடும்சோறு   _   எதிர்காலம்
            
          எரிதழல்
          வீசுதென்றல்
          கடிநாய்
          சுடுசோறு
          குடிநீர்
          ஏவுகணை
          ஓடுதளம்
          ஆடுகளம்
          படர்கொடி
          மூடுபனி
          பாய்புலி
          திருவளர் செல்வன்
          திருவளர் செல்வி

             " காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை "
                                                                                          நன்னூல்  (364 )

     சொற்களைப் பிரித்து முக்கால வினைகளையும் சொல்லிப் பழகுக.

Comments

Popular Posts