உறுபசியும் ஓவாப்பிணியும்....
உறுபசியும் ஓவாப்பிணியும்...
"உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு "
குறள் : 734
விளக்கம் : மிக்க பசியும் ஓயாத நோயும் வெளியிலிருந்து தாக்கி அழிக்கும் பகைமையும் ஆகிய இம்மூன்றும் இல்லாமல் இனிதே நடப்பதே நாடாகும்.
உறுபசியும். _ மிக்க பசியும்
ஓவா பிணியும் _ நீங்காத நோயும்
செறு பகையும் நெருங்கி அழிக்கின்ற பகையும்
சேராது இயல்வது _ சேராமல் இருப்பது
நாடு _ நாடாகும்
English couplet :
"That is a land whose peaceful annals know Nor famine fierce
Nor wasting Plague, nor ravage of the foe"
Explanation. :
Kingdom is that whichContinues to be free from excessive starvation , irremediable epidemics, and destructive foes.
Transliteration. :.
" uRupasiyum Ovaap piNiyum. seRupakaiyum
saeraa thiyalvadhu. Naadu"
நாள்பட்ட பசி தீயாய்க் கனன்றிட ஒரு கவளம் சோற்றுக்காய் நாயோடு நடுத்தெருவில் போராடும் சிறார் கூட்டம்,
என்று தீருமோ இந்தப் பிணியென கட்டிலில் முக்கலும் முனங்கலுமாய் கிடந்து வாடும் பெரியோர், சதா குண்டுகளின் சத்தத்தில் குலை நடுங்கிக் கிடக்கும் அப்பாவி மக்கள்.இப்படிப்பட்ட நிம்மதியற்ற நிலை உடைய நாடு எப்படி நாடாக முடியும் ?
இந்த அவலங்கள் இல்லாது இருக்கும் நாடே நாடு என நாட்டிற்கு
நல்லிலக்கணம் வகுத்துவிட்டார் திருவள்ளுவர்.
மொத்தத்தில் பசி, நோய்,பகை இல்லா பூமியே நாடு எனக் கருதப்படும்.
Comments
Post a Comment