வெள்ளத்தனைய மலர் நீட்டம்...

              வெள்ளத்தனைய மலர் நீட்டம்...


   

"   வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
      உள்ளத் தனையது உயர்வு."

                                             குறள்  :  595

வெள்ளத்து  -நீரளவுக்கு

அனைய - ஏற்ப 

  மலர் - நீர் தாவரங்களின் பூ

 நீட்டம் _ நீட்சி

மாந்தர்- மக்கள்

தம் - தமது

உள்ளத்து- மன ஊக்கத்துக்கு

அனையது-ஏற்றாற் போலவே

உயர்வு- உயர்ச்சி 


                          

நீர்த் தாவரங்களில் மலரும்

 மலர்களின் தண்டின் நீளமானது

 தடாகத்தின் நீர்மட்டம் எவ்வளவு
உயரம் இருக்குமோ அதற்கு ஏற்ப

 உயரம் உடையதாக இருக்கும்.
 அதுபோல ஒருவனுடைய மனதின் 

ஊக்கம் எந்தஅளவு இருக்குமோ

 அந்த அளவு அவனது

வளர்ச்சியும் இருக்கும் .


விளக்கம்:

ஒரு தடாகத்தில் இருக்கும் நீரின்

 உயரத்தின் அளவுக்கு  ஏற்ப நீரில் பூக்கும் 

மலர்களான தாமரை , ஆம்பல் , அல்லி

போன்ற மலர்களின் தண்டும் இருக்கும்.

 நீர்வரத்து அதிகமாக அதிகமாக 

நீர்நிலையின் நீர்மட்டம்

 உயர ஆரம்பிக்கும்.

நீர்மட்டம் உயர்ந்தால் தண்டும் நீரின்

மட்ட்டத்திற்கு  ஏற்ப நீரின் மேல் 

உயர்ந்து கொண்டே வரும்.

இது நீரில் வளரும்  தாவரங்களின் இயல்பு.


அதுபோல ஒருவனுடைய மனதிலுள்ள 

ஊக்கத்திற்கு ஏற்ப அவனது வளர்ச்சியும்

உயர்வும்  இருக்கும்.

மனதின் ஊக்கம் மிகுதியாக ஆக

அவனது வளர்ச்சியும் கூடிக் கொண்டே இருக்கும்.

இது இயல்பாகவே ஊக்கம் உடைய ஒருவனின்

வாழ்வில் நடைபெறும் ஒரு செயலாகும்.

நீரின் அளவு கூடுகிறதே என்று யாரும் 

மலரைத் தூக்கிவிட வேண்டிய 

அவசியம் இல்லை.
தானாக வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ளும் 

இயல்பு நீர் தாவரங்களுக்கு உண்டு.
 ஊக்கம் இருப்பவனையும் யாரும் உந்தி 

ஏந்தித் தள்ள வேண்டியதில்லை.

 அவனுடைய ஊக்கமே வளர்ச்சியைக்
 கொண்டு வந்து சேர்க்கும்.

மாந்தர்தம் ஊக்கத்தின் அளவினதுதாம்

அவரது வளர்ச்சி.


உவம உருபு போல என்பது மறைந்து

வந்துள்ளதால் இந்தக் குறள்

எடுத்துக்காட்டு உவமையணியாகும்.


English couplet :

"   As the water rises will be waterplant flowers stems rise
   Extent of a persons growth depends on his zeal likewise."

Explanation :
  
    Like position of water flower is determined by the level of water.
    The degree of achievement is dependent upon the
    mental makeup of an individual.

Transliteration :

"VeLLath  thanaiyadu malarniTTam mAndartham
uLLath  tha naiyandi uyarvu"

  

ஒரு தடாகத்தில் இருக்கும் நீரின் உயரத்தின் அளவுக்கு
   

Comments

Post a Comment

Popular Posts