பண்புத்தொகை
பண்புத்தொகை
நிறம் , வடிவம் , சுவை , குணம் போன்ற பண்புகளைக் குறிக்கும் சொற்கள் பண்புப் பெயர் எனப்படும்.
ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்க பண்புப்பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வது பண்புத்தொகை எனப்படும்.
பண்பி என்பது பண்பை உடைய சொல்லாகும்.
செந்தாமரை என்பது பண்புத்தொகை.
செம்மை ஆகிய தாமரை என்பதுதான் செந்தாமரை என எழுதப்பட்டுள்ளது.
இதில் ஆகிய என்னும் உருபு மறைந்திருப்பதால் பண்புத்தொகை எனப்படுகிறது.
பண்புத்தொகையில் மை என்னும் விகுதியும் ஆகிய என்னும் உருபும் மறைந்திருக்கும்.
நிறத்தைக் குறிக்கும் சொற்கள்
செம்மை , பசுமை , வெண்மை , கருமை
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்
வட்டம் , சதுரம்
சுவையைக் குறிக்கும் சொற்கள் :
இனிமை , கசப்பு
குணத்தைக் குறிக்கும் சொற்கள் :
நன்மை , தீமை
வெண்மை + கரடி = வெண்கரடி
பெருமை + கடல் = பெருங்கடல்
மூன்று + வேந்தர் = மூவேந்தர்
முதுமை + ஊர் = மூதூர்
சிறுமை + இலை = சிறியிலை
பசுமை + இ = பாசி
பசுமை + தார் = பைந்தார்
நடுமை + ஆறு = நட்டாறு
வெம்மை + உயிர் = வெவ்வுயிர்
சிறுமை + ஆறு = சிற்றாறு
நன்மை + அன் = நல்லன்
கருமை + அன் = கரியன்
பசுந்தாள் _ பசுமையான தாள்
இன்சொல் _ இனிமையான சொல்உஎ
வட்டப் பலகை _ வட்டமாக உள்ள பலகை
Comments
Post a Comment