உண்ணும் சொற்கள்

                 உண்ணும்    சொற்கள்


       தமிழ் சொல்வளம் மிகுந்த ஒரு மொழி.
           உணவு உண்ணும்
           முறையில் உள்ள சின்ன சின்ன வேறுபாடுகளை வைத்து எத்தனை...எத்தனை  சொற்கள் புழக்கத்தில்  உள்ளன.
           அவற்றை ஏற்புடைய இடங்களில் இட்டு எழுதும்போது சொற்றொடர் முழுமை பெற்று அழகு கூடுகிறது.
           என்றும் இளமை குன்றா பொலிவு கொண்ட நடையோடு பீடுநடை போடுகிறது.
           உணவு உண்ணும்முறைக்கு இத்தனை சொற்களா...
           எந்த மொழியிலும் இல்லா பெருமை தமிழுக்கு உண்டு.
           சொற்களைப் படியுங்கள் புரியும்.இந்த வேறுபாடுகளை அறிந்து சொற்றொடர்களில் பயன்படுத்தும்போதுதான் மொழிநடை முழுமை பெறுகிறது. அழகு பெறுகிறது.
           பேச்சில் சுவை கூடுகிறது.
          
          
          
     அருந்துதல்   _    மிகச் சிறிய அளவு உட்கொள்ளுதல்

     உண்ணல்  _  பசி  தீர உண்ணுதல்

      உறிஞ்சுதல்  _   வாயைக்  குவித்து வைத்து நீராகரங்களை ஈர்த்து  உறிஞ்சி குடித்தல்

       குடித்தல்  _   நீரியியல் உணவை சிறிது சிறிதாக  குடித்தல்

       தின்றல்  _  தின்பண்டங்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றல்

       துய்த்தல்  _  சுவைத்து ருசித்து உட்கொள்ளுதல்

      நக்கல்  _  நாக்கினால் துலாவி நக்கி உட்கொள்ளுதல்

      நுங்கல்.  _  முழுவதையும் வாயால் ஈர்த்து உறிஞ்சி குடித்தல்

    பருகல்  _  நீரியற் பண்டத்தை  சிறுகச் சிறுகக் குடித்தல்

     மாந்தல்  _  பெரு வேட்கையுடன் மடமடவென்று குடித்தல்

     மெல்லல்  _   பண்டத்தைப் பல்லால் கடித்து மென்று உட்கொள்ளுதல்

       விழுங்கல்  _  பல்லுக்கும் நாக்குக்கும்   இடையே  தொண்டை வழி அப்படியே  உட்கொள்ளுதல்

       
    

   

Comments