விசாரணை

     
                    விசாரணை

    நில்லும்...என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப்   போவும்..."
            தடுத்து நிறுத்தினாள் பொன்னம்மா.
             ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப்போன பொன்னுசாமி...
             அப்படியே பொன்னம்மாளை மேலும் கீழும் பார்த்தார்.
       அந்தப் பார்வை "என்ன....என்ன கேட்கணும்?"
         என்பதுபோல் இருந்தது.
        " நீரு என்னதான் நினைச்சுட்டு இருக்கியரு...புள்ளைகள்         வாழணும்னு நினைக்கிறேரா இல்ல அப்படியே
         எங்கேயாவது கடலுல உடலுல விழுந்து செத்து
          தொலையட்டும்ன்னு நினைக்கியரா..."
         பொன்னம்மாளின் கேள்விகள் புதிராக வந்து விழுந்தன.
        " என்ன கேட்குற..."
        " காது கேக்குதா...இல்ல காது கேட்காதது மாதிரி நடிக்கியரா.."
        " நான் எதுக்கு நடிக்கணும்....என்ன என்று
         சொன்னாதான தெரியும்."
         "கலியாணத்துக்குமாப்பிள்ள பாத்தியற  ஒரு நாலு
          ஜனத்துக்கிட்ட கேட்கணுமின்னு தெரியல..."
        " ஏன் என்னாயிற்று...."
       "  ஒண்ணும் ஆவல...உம்ம மவதான் ஒத்தையா வந்து நிக்குறா..."
        " ஏன்...எதுக்கு.."..கண்கள் மகளைத்தேடின.
       "  மாப்பிள்ளைக்கூட ஏதாவது சண்டையா..."
       "  சண்டையுமில்ல சட்டிப்பானையுமில்ல...."
        " பின்ன என்னதான் பிரச்சனை...."
        " நீருதான் பிரச்சனை..." மறுபடியும் வந்த இடத்திற்கே வந்தாள் பொன்னம்மா.
       "  சொல்லு நான் என்ன பிரச்சனை?"
      "   மாப்பிள்ளையைப்பத்தி விசாரிச்சியற ..அவர் வேலை பார்த்த   கடையைப் பற்றி விசாரிச்சியரா..."
       "  கடையைப் பற்றி நாம ஏன் விசாரிக்கணும்...கடை நல்ல கடை.
         வியாபாரம் நல்லாநடக்குது.. பிறகு விசாரிக்கிறதுக்கு 
         என்ன  இருக்கு.. வேறு என்ன கேட்கணும்...."
         " வியாபாரம் நல்லா நடந்தா போதுமா.....கடை யாருக்க
          என்று விசாரிச்சிப் பார்த்தீரா..."
        "  இது என்ன புது குண்டா தூக்கிப் போடுறா....."
         " குண்டாதான் தூக்கிப் போட்டுட்டான.....பெரிய குண்டா
          தூக்கி என் புள்ள தலையில் போட்டுட்டான.." 
          முகத்தைத் துடைத்தபடி அழுதாள் பொன்னம்மா...
          திருமணம் ஆகி முப்பது வருசத்துல முதல் முறையா 
          கணவனிடம் நியாயம் கேட்டு அழுதாள்.
        "  விமலா....விமலா..."குரல் கொடுத்தார் பொன்னுசாமி.
          அப்பா...கூப்பிட்டதும் அழுது கொண்டே ஆஜரானாள் விமலா.
        "  நீயாவது சொல்லு.. என்ன பிரச்சனை தெளிவா சொல்லு"
           அம்மா முகத்தைப் பார்த்தாள் விமலா.
         "  என் முகத்தைப் பார்த்து என்ன செய்ய போறே...சொல்லு ...கேட்காருல்ல..."
           மறுபடி அப்பாவைப் பார்த்து அழுதாள் விமலா.
           "அழுது ஒண்ணும் ஆகப்போவதில்ல...இனி சொல்லித்தான ஆவணும்....
          எத்தனை நாள்தான் மூடி மறைக்க முடியும். "புலம்பி தள்ளினாள் பொன்னம்மா.
        "  மாப்பிள்ளைக்கு ஏதாவது கெட்டப் பழக்கம் இருக்காம்மா"
         " இல்லப்பா..கடை இல்லப்பா "
         " கடை இல்லங்கிற... அப்புறம் வேறு என்னதான் உனக்குப் பிரச்சினை..."
         " கடை இல்லப்பா.... கடை அவருக்கு இல்லப்பா..."
        "  என்னது ...கடை அவருக்கு  இல்லையா...."
          ஒரு நிமிசம் தலை சுற்றுவதுபோல் இருந்தது.
        "  என்னம்மா சொல்லுற...."
        "  கடையில வேலைதான் பார்க்குறாருப்பா..."
          பையன் நல்ல பையனா என்று பக்கத்துக் கடையில் எல்லாம் விசாரித்தவருக்கு கடை யாருக்க என்று கேட்கணும் என்று தோன்றல...கன்னியாகுமரியில கடை இருக்கு...
          போய் பையனை  பார்த்துகிடுங்க  ...என்றுதான் தரகர்
           சொன்னார்.
         "  தரகரை முழுசா நம்புனது தப்பா போச்சு.. "
            சொந்த கடை வைத்திருக்கிறான் என்று ஐம்பது பவுன் நகை போட்டு கட்டி கொடுத்தாரு..
             மாப்பிள்ளை கடையில் வேலை பார்க்கிற பையனா....
              அப்படியே அதிர்ந்துபோய்  நின்றார் பொன்னுசாமி.
               கால்களுக்குக் கீழ் உள்ள பூமி அப்படியே நழுவுவதுபோல  இருந்தது.
               "இப்போ என்ன பண்ணப் போறீரு...."
               கூண்டில் விட்டு விசாரிப்பதுபோல் விசாரித்தாள்
                பொன்னம்மா.
               ஒரு விசாரணைக் கைதியாக கூனிக்குறுகி நின்றார்
                 பொன்னுசாமி.
                  இரவு சாப்பிட விடவில்லை. வார்த்தைகள் ஒவ்வொன்றும்   ஈட்டியாக வந்து தைத்தன.
                  இரண்டாதாரத்துப் பிள்ளை என்று மிதப்பில பண்ணிட்டீரு...
                  இன்னும் எதுக்கு இருக்கியரு....
                  என்று சரமாரியாக  வார்த்தைகளை 
              அள்ளி வீசினாள் பொன்னம்மா.
                  விசாரணைக்கைதியை நிற்க விட்டு           விசாரிப்பதுபோல  ஆயிரம் கேள்விகளைக் கேட்டு 
               துளைத்து எடுத்தாள்.
                 
                  பொன்னம்மா கேட்ட வார்த்தைகள்
                  ஒவ்வொன்றும்நெஞ்சுக்குள் சுரீர்...சுரீர் என்று     குத்துவது போல இருந்தது.
                  நெஞ்சுக்குழிக்குள் கிடந்து உருண்டு ....உருண்டு
                  மூச்சுவிட முடியாமல் செய்ய..... மறுநாள் காலை...
                  விசாரணை கைதி பொன்னுசாமி   
                   விசாரணை டார்ச்சர் தாங்க முடியாமல் படுக்கையிலே இறந்து கிடந்தார் பொன்னுசாமி.
               
                  
                 
               
               
           
          
          
          
          
          
          
          
         
       

Comments

Popular Posts