போலிக்குள் உலகம்
போலிக்குள் உலகம்
போலிக்குள் உலகம்
புதையுண்டு கிடக்குது
கேலிக்கு மயங்குது
கேளிக்கை விரும்புது
நாழியாயினும் பேசுது
நாட்கணக்காய் வீணடிக்குது
கேள்வியை வெறுக்குது
கேட்பவரை துறக்க நினைக்குது
வீணில் காலம் கடத்துது
வீதியில் பேசி சிரிக்குது
தன்னை மறக்குது
தன்மானம் இழக்குது
பெற்றோரை வெறுக்குது
பேர் தெரியாரை அழைக்குது
கவர்ச்சியை தேடுது
கண்களை கெடுக்குது
கதைகதையாய்ப் பேசுது
கனவுக்குள் மிதக்குது
கற்பனையில் வீடு கட்டுது
கனவுக்குள் குடித்தனம் நடத்துது
வீட்டில் பேச தடை விதிக்குது
வீதியில் பேசி சிரிக்குது
மதியீனம் இது புரிந்துவிடு
வீண் இதுவென வீசிவிடு
மயங்கி நில்லாதே விலகிவிடு
தறி கெட்டு ஓடாதே நின்று விடு!
Comments
Post a Comment