ஐம்பெரும்காப்பியங்கள்

     

     தமிழன்னையின் அணிகலன்களாக இருக்கும் சிறப்பு பெற்ற   காப்பியங்கள் ஐந்து உண்டு.
        அவை  ஐம்பெருங்காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

           கால் சிலம்பு               _           சிலப்பதிகாரம்

           இடை ஒட்டியாணம்    _             மணிமேகலை  

           கழுத்துமாலை             _            சீவக சிந்தாமணி

          கை  வளையல்              _            வளையாபதி

           காது தோடு                    _             குண்டலகேசி

          கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு
           சிலப்பதிகாரமாகும்.
           அந்த சிலம்பைத்தான் தமிழன்னை தன் கால் சிலம்பாக
           அணிந்து  அழகு பார்க்கிறார்.

          சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோ அடிகள்.

            மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றைக் கூறும் காப்பியம் மணிமேகலை.
             ஆடை நழுவாமல் இருக்க இடையில் அணியப்படும்
             அணிகலன் மேகலை.
              இது அன்மொழித்தொகையாக அதை அணிந்த பெண்ணை  உணர்த்துகிறது.
              இந்த மணிமேகலையைத்தான் தமிழன்னை தனது
               இடையில் அணிந்துள்ளாராம்.

                மணிமேகலையை எழுதியவர் சீத்தலை சாத்தனார்.

              சீவக மன்னன் வரலாற்றைக் கூறும் காப்பியம்
               சீவக சிந்தாமணி.
              சிந்தாமணி என்பது அரசன் மணிமுடியில் 
பதிக்கப்படும் ஒரு  விலைமதிப்பற்ற ஒரு கல்.
               தமிழன்னை சீவக சிந்தாமணியை மணிமுடியில் 
               வைத்துப் பெருமிதம் கொள்கிறார்.
               
              சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கத்தேவர்.

           வளையல் அணிந்த பெண் வளையாபதி.
           வளையாபதியின் வரலாற்றைக் கூறும் காப்பியம்
            வளையாபதி.
            தமிழன்னை வளையாபதியை கை வளையலாக
            அணிந்துள்ளாராம்.
             இதில்   72  பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
                 
           வளையாபதியை எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை.

          குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் 
குண்டலகேசி.
           குண்டலகேசி வரலாறு கூறும் நூல் குண்டலகேசி.
           குண்டலம் என்பது மகளிர்அணியும் காது வளையம்.
           தமிழன்னை குண்டலகேசியை காதில் அணிந்துள்ளாராம்.

           குண்டலகேசியை எழுதியுள்ளவர் நாதகுப்தனார்.

           
               
               
               

             
            
           

           

      
      

Comments

Popular Posts