செய்க பொருளை...
செய்க பொருளை.....
"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில் "
குறள் : 759
ஒருவன் கண்டிப்பாக பொருளை ஈட்ட வேண்டும்.
நம் பகைவரின் ஆணவத்தை அழித்து வீழ்த்த வல்ல கூரிய ஆயுதம் செல்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
English couplet :
"Make money !Foreman's insolence o'ergrown
To lop away no keener steel is known "
Explanation :
Accumulate wealth ; it will destroy the arrogance of your foes; there is no weapon sharper than it.
Transliteration :
" seyka poruLaich cheRunhar serukkaRukkum
eqkadhaniR kooriya thil "
ஒருவன் உலகத்தில் நன்றாக வாழ வேண்டும் என்று விரும்பினால்
ஏராளமாக பொருள் ஈட்ட வேண்டும்.
பகைவரின் செருக்கை அறுக்க வல்ல கூரிய ஆயுதம் ஒன்று உண்டென்றால் பணம் ஒன்று மட்டுமன்றி வேறெதுவும் இருக்க முடியாது.
பகைவருக்கு முன்னால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால்
அதற்கு ஒரே வழி பணம் சம்பாதிப்பது மட்டுமாக தான் இருக்கும்.
பணத்தால் மட்டுமே பகையை வெல்ல முடியும். ஆகையினால்
செய்க பொருளை என்று கட்டளையிடுவது போல கூறுகிறார்
வள்ளுவர்.
இல்லானை இல்லாளும் வேண்டாள்... ஈன்றெடுத்த தாய் வேண்டாள்.
ஆதலால் பணம் பண்ணுங்கள் என்ற வள்ளுவர் பகைவரை வெல்லவும் பணம் வேண்டும் என்பதை இந்த பாடல்மூலம்
தெளிவுபடுத்தியுள்ளார்.
Comments
Post a Comment